தவெகவில் இணையும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் – செங்கோட்டையன் சொன்ன தகவல்
TVK Alliance : ஈரோடு மாவட்டத்தில் தவெக சார்பில் புதிய கட்சி அலுவலகம் டிசம்பர் 28, 2025 அன்று திறக்கப்பட்டது. கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்த செங்கோட்டையன், கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணையவிருப்பதாக பரவும் தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.

டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் - செங்கோட்டையன்
ஈரோடு, டிசம்பர் 28: விஜய் (Vijay)தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் செங்கோட்டையன் (Sengottaiyan) இணைந்தார். அவர் அதிமுகவில் 50 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்த அவர், கொங்கு மண்டலத்தில் பலம்வாய்ந்த அரசியல் தலைவராக இருந்து வருகிறார். அவர் தவெகவில் இணைந்தது அக்கட்சிக்கு பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மேலும் இரு முக்கிய தலைவர்கள் பொங்கலுக்கு முன் அதிமுகவில் இணையவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தவெகவில் இணையவிருக்கும் பிரபலங்கள்
ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் அலுவலகம் டிசம்பர் 28, 2025 அன்று திறக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் தவெக கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசியதாவது, எம்ஜிஆருக்கு எப்படி கூட்டம் கூடியதோ, ஜெயலலிதாவிற்கு எப்படி கூட்டம் கூடியதோ, அதே போல தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிற்கு கூட்டம் கூடுகிறது.
இதையும் படிக்க : ஜனவரி 1 முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் அதிகரிப்பு – பயணிகள் கடும் அதிருப்தி
அவர் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியில் அமருவார். பொங்கலுக்கு முன் பலர் தவெகவில் இணையவிருக்கிறார்கள் என்றார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் அதனை நீங்கள் பொங்கலுக்கு முன் காண்பீர்கள் என தெரிவித்தார். அவர் சொல்வது போல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவ தினகரன் ஆகியோர் தவெகவில் இணைந்தால் அக்கட்சியின் வலுவானதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞ
மேடையில் கண்கலங்கிய செங்கோட்டையன்
முன்னதாக கடந்த டிசம்பர் 27, 2025 அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வழி தெரியாமல் இருந்த போது, -னக்கு வழிகாட்டியவர் விஜய். நான் இன்றைக்கு சொல்கிறேன், என் உடம்பில் ஓடுகிற ஒரு துளி ரத்தமும் விஜய்க்காக தான் என்று பேசி அவர் கண் கலங்கினார்.
இதையும் படிக்க : விஜயகாந்த் நினைவு தினம்.. தலைவர்கள் மரியாதை.. பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணி!
தொடர்ந்து பேசிய அவர், விஜய்யை முதல்வராக ஏற்று கொண்டு யார் வேணாலும் கூட்டணிக்கு வரலாம். ஆனால் விஜய்யை தாண்டி யாராலும் முதல்வர் என்று கனவு காண முடியாது. விஜய் தற்போது மலேசியா சென்றுள்ளார். 9 என்றாலே வெற்றியின் சின்னம். அந்த தேதியில் படம் வெளியாக உள்ளது, அதற்கு பிறகு யாராலும் வாயை திறக்க முடியாது, ஜனநாயகன் படத்தை எதிர்பார்த்துள்ளோம்.