தவெக கூட்டத்தில் பங்கேற்ற மேலும் ஒருவர் மரணம்…. பலி எண்ணிக்கை உயர்வு – அதிர்ச்சி தகவல்
TVK Rally Stampede: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கவின் என்ற இளைஞர் மரணம் அடைந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கரூரில் நடைபெற்ற பரப்புரையில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த விபத்தில் பலி 39 ஆக இருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவின் செப்டம்பர் 28, 2025 அன்று உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
பலி எண்ணிக்கை உயர்வு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் பங்கேற்ற கவின் என்ற இளைஞர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவர், செப்டம்பர் 28, 2025 அன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க : கரூர் கொடூரம்.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு




நீதிபதியிடம் தவெக முறையீடு
இந்த நிலையில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி தண்டபாணியை இல்லத்தில் சந்தித்து தவெக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் வருகை கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தவெக முறையீடு குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செப்டம்பர் 29, 2025 திங்கள் கிழமை மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் நடைபெற்ற பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு அறிவித்துள்ளார். இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைவன் அருளால் நாம் மீண்டு வர முயற்சிப்போம், சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் தவெக உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : கரூர் துயரம்.. முதல்வர் ஸ்டாலினின் 2 நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து!
மேலும் தமிழக அரசு சார்பில் உயரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.