தஞ்சாவூர் மருத்துவமனையில் கிடைத்த புதையல்…. ரூ.9 லட்சம் மதிப்பு – மருத்துவர்கள் ஆச்சரியம்

Old Copper and Brass Utensils Discovered: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பயன்படுத்தப்படாத கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டபோது அங்கு ஒரு அறையில் செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் கண்டெடுக்கப்ப்டடுள்ளன. இதன் மதிப்பு ரூ. 9 லட்சம் இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர் மருத்துவமனையில் கிடைத்த புதையல்.... ரூ.9 லட்சம் மதிப்பு - மருத்துவர்கள் ஆச்சரியம்

தஞ்சாவூர் மருத்துவமனையில் ரூ.9 லட்சம் மதிப்பில் கிடைத்த பொருட்கள்

Updated On: 

28 Dec 2025 17:11 PM

 IST

தஞ்சாவூர், டிசம்பர் 28 : தஞ்சாவூர் (Thanjavur) அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளின் போது, 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டடப் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டிருந்த ஒரு அறை மற்றும் சேமிப்பு பகுதிகளில் இருந்து இந்த பழமையான பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயன்படுத்தப்படாத அறையில் இருந்து கிடைத்த பொக்கிஷம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பயன்படுத்தப்படாத கட்டடம் இருந்துள்ளது. இதனையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் அதனை சுத்தப்படுத்த முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் அங்கு பராமரிப்பு பணிகளுக்காக திறக்கப்பட்டபோது, அந்த இடத்தில் இருந்து செம்பு குடங்கள், பித்தளை பாத்திரங்கள், சமையல் பயன்பாட்டிற்கான பெரிய பாத்திரங்கள், தண்ணீர் சேமித்து வைக்கும் அண்டா உள்ளிட்ட ஏராளமான உலோகப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இவை அனைத்தும் சேர்த்து சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : எஸ்ஐஆர்: 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்.. 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!

மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தகவல் அளித்ததையடுத்து, வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மீட்கப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இவை எப்போது, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன, எவ்வாறு அந்த இடத்தில் சேமிக்கப்பட்டன என்பதைக் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாத்திரங்கள் குறித்து தீவிர விசாரணை

இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த பாத்திரங்கள் மருத்துவக் கல்லூரியின் ஆரம்ப காலங்களில், மாணவர் விடுதிகள் அல்லது சமையல் கூடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் இதன் தேவை குறைந்து,  பயன்பாடு இல்லாத காரணத்தால் இந்த கட்டடத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

இதையும் படிக்க : இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

மேலும், இந்த பழமையான செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் உண்மையில் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பதையும், வரலாற்று முக்கியத்துவம் உள்ளதா என்பதையும் கண்டறிய நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், இத்தகைய பழமையான உலோகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த பாத்திரங்களின் பின்னணி குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு
2025 ஆம் ஆண்டு எப்படி இருந்தது? இணையத்தில் வைரலாகும் சமந்தா பகிர்ந்த புகைப்படங்கள்..
முதல்முறையாக வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
2025ல் ஸ்விகியில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது தெரியுமா?