முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை – ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம்..
O Panneerselvam Statement: தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை என ஓ பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தமிழ் பன்பாட்டின் வெளிபாடு ஆகும் என்றும் வதந்தி பரப்புது நாகரீகமற்ற செயல் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ்
ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை: தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவில் பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகிறது. 2025 ஏப்ரல் மாதம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது ஓ பன்னீர்செல்வம் பிரதமரை சந்திப்பதற்காக நேரம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்:
இந்த சூழலில் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தார். ஒரே நாளில் இரண்டு முறை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது பேசிய ஓ பன்னீர்செல்வம் அரசியலில் நிரந்தர நண்பரும் யாரும் இல்லை எதிரியும் யாரும் இல்லை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அன்வர் ராஜாவைப் போல ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என பல்வேறு யூகங்கள் வெளியானது.
மேலும் படிக்க: மக்கள் பிரச்சனை.. மீஞ்சூர் போரூராட்சியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..
முதலமைச்சரை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்! pic.twitter.com/7CFV5PJzTR
— O Panneerselvam (@OfficeOfOPS) August 4, 2025
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை என்ற ஓ பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த சந்திப்பை அரசியலாக்குவதும் நாகரீகமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ” மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய அவர்களை, அவர்களது இல்லம் தேடி சென்று நலம் விசாரிப்பதும் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்த துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ் பண்பாடு. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திறம்பிய நிலையில் அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.
மேலும் படிக்க: தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகள்.. பொதுக்கூட்டங்கள் நடத்த ஓ. பன்னீர்செல்வம் திட்டம்..
இதைப் போன்ற அவரது மூத்த சகோதரர் மு.க முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன் இந்த சந்திப்பு தமிழ் பண்பாட்டின் வெளிபாடு. என்னுடைய மனைவியும் தாயாரும் இறந்த போது என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த சந்திப்பில் எந்தவித அரசியலும் இடம்பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சந்திப்பை வைத்து திமுகவின் B டீம் என்றும் நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், இணைய போவதாகவும் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகள் சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை” என தெரிவித்துள்ளார்.