AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜய்.. தவெக அரசின் அராஜகம் – மு.க ஸ்டாலின் காட்டம்

MK Stalin On CM Vijay: போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், இரவோடு இரவாக அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’, இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜய்.. தவெக அரசின் அராஜகம் – மு.க ஸ்டாலின் காட்டம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Oct 2026 11:37 AM IST

அக்டோபர் 6, 2026: செவிலியர்கள் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது:

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, பேச்சுவார்த்தைக்குச் சென்ற பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், காவல்துறையினர் செவிலியர்களை கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

தவெக அரசின் அராஜக நடவடிக்கை – ஸ்டாலின் விமர்சனம்:


இந்நிலையில், செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ள மு.க.ஸ்டாலின், அறவழியில் போராடிய செவிலியர்களை காவல்துறையைக் கொண்டு கைது செய்தது த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கை என விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தலின்போது பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர் அதே கோரிக்கையை முன்வைத்து போராடியவர்களைக் கைது செய்வது முரண்பாடாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா?

மேலும், போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், இரவோடு இரவாக அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’, இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. முதற்கட்டப் பணிகளுக்கு CMDA பச்சைக்கொடி!

போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவர், “வேண்டாம், உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், இதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதை காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் விளக்குவாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us