மாநிலங்களவை தேர்தல்… கமல்ஹாசன் உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு!
Rajya Sabha Election : மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யக் தலைவர் கமல்ஹாசன் உட்பட திமுக கூட்டணி சார்பாகவும், அதிமுக சார்பாகவும் அனைத்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதன் மூலம் ஆறு பேரும் மாநிலங்களவை எம்.பியாக பொறுப்பேற்க உள்ளனர்.

சென்னை, ஜூன் 10 : மாநிலங்களவை தேர்தலில் (Rajya sabha election 2025) மக்கள் நீதி மய்யக் தலைவர் கமல்ஹாசன் (kamal hassan) உட்பட திமுக கூட்டணி சார்பாகவும், அதிமுக சார்பாகவும் அனைத்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதன் மூலம் ஆறு பேரும் மாநிலங்களவை எம்.பியாக பொறுப்பேற்க உள்ளனர். அதாவது, திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இவரது மனுக்கள் 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்கள் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் 2025 ஜூலை 24ஆம் தேதி முடிவடைகிறது.
மாநிலங்களவை தேர்தல்
திமுகவில் அப்துல்லா, சண்முகம், பி.வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவில் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. காலியாக உள்ள 6 பேரின் இடங்களுக்கும் 2025 ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது.




இதற்கான வேட்புமனு தாக்கல் 2025 ஜூன் 2ஆம் தேதி தொடங்கி 2025 ஜூன் 9ஆம் தேதி முடிவடைந்தது. திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கமல் உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு
2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று வேட்பு மனு பரிசீலனை நடந்தது. இதில், திமுக சார்பாகவும், அதிமுக சார்பாகவும் போட்டியிட்ட 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கபட்டது. இதன் மூலம் 6 பேரும் மாநிலங்களவை எம்பியாக தேர்வாக வாய்ப்பு உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 2025 ஜூன் 12ஆம் தேதியாகும். அன்றைக்கு 6 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள். எனவே, ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் கமல்ஹாசன்
VIDEO | Chennai : Actor and politician Kamal Haasan (@ikamalhaasan ) files Rajya Sabha nomination in the presence of Tamil Nadu Chief Minister MK Stalin (@mkstalin ) and Minister Udhayanidhi Stalin(@Udhaystalin ).
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/Vp9720EAGs
— Press Trust of India (@PTI_News) June 6, 2025
நடிகர், தயாரிப்பாளர், நடன ஆசிரியர், பாடகர் என பல பரினாமங்களை கொண்ட கமல்ஹாசன், தற்போது நாடாளுமன்றவாதி என்ற புதிய அவதாரத்தை எடுக்க இருக்கிறார். திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை செல்ல உள்ள கமல்ஹாசன், பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது பதவிக்காலம் 2030ஆம் ஆண்டு வரை இருக்கும். இதற்கிடையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட கூடுதல் இடங்களை கேட்பார் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.