Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Seeman : அமித்ஷா தமிழகம் வந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்.. சீமான் சொன்ன விளக்கம்!

Home Minister Amit Shah's Tamil Nadu Visit | தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Seeman : அமித்ஷா தமிழகம் வந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்.. சீமான் சொன்ன விளக்கம்!
சீமான்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 13 Jun 2025 09:46 AM

திருச்சி, ஜூன் 09 : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Union Minister Amit Shah) தமிழகம் வந்ததற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சி (AIADMK – All Party Anna Dravida Munnetra Kazhagam) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைப்பது குறித்து பேச இருக்கலாம் என்று நாம் தமிழர் கட்சி (NTK – Naam Tamilar Katchi) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று (ஜூன் 08, 2025) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், அமித்ஷா வருகை குறித்து சீமான் பேசியது என்ன என விரிவாக பார்க்கலாம்.

இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஜூன் 7, 2025 இரவு மதுரை வந்தடைந்தார். அங்கு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 08, 2025) காலை 11 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் அமித்ஷா, மாலையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளில் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதில் திமுக உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார்.

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா

அமித்ஷா வருகை குறித்து கருத்து சொன்ன சீமான்

தமிழகத்தில் இன்னும் பத்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 08, 2025) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், அமித்ஷா வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அது குறித்து பேசி அவர், மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேச அமித்ஷா தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.