“பள்ளி மாணவர்களின் உணவில் அலட்சியம் காட்டக் கூடாது”.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளி மாணவர்களின் மதிய உணவுக்குப் பல முறை அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதைக் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. தற்போது அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் அதே போன்றதொரு அவல நிலை மீண்டும் தொடரக் கூடாது. இது வெறும் கொள்முதல் சார்ந்த அல்லது வர்த்தகம் சார்ந்த பிரச்சனை அல்ல.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையைத் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தச் சூழலில், கடந்த மார்ச் மாதம் முட்டை சந்தையில் ஒரு முட்டையின் விலை ₹3.70 என்று கணிசமாகக் குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை மொத்தமாக வாங்கி குளிர்சாதனக் கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..
குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை:
தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை…
— K.Annamalai (@annamalai_k) May 27, 2026
இதன் மூலம், குறைந்த விலைக்குப் பெருமளவில் முட்டைகளைச் சேமித்து வைத்துக்கொண்டு, அவற்றை ஆண்டு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு பொருள் அல்ல. எனவே, இந்த விவகாரத்தில் பின்வரும் முக்கியக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
முட்டைகளை மாதக்கணக்கில் குளிர்சாதனக் கிடங்குகளில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்குக் கொண்டு செல்லும் போது அதன் தரம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு பெருமளவு குறையும். நீண்ட நாட்கள் சேமிக்கப்படும் முட்டைகள் பள்ளிக் குழந்தைகளின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும்.
கடந்த காலப் பாடம்:
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளி மாணவர்களின் மதிய உணவுக்குப் பல முறை அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதைக் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. தற்போது அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் அதே போன்றதொரு அவல நிலை மீண்டும் தொடரக் கூடாது. இது வெறும் கொள்முதல் சார்ந்த அல்லது வர்த்தகம் சார்ந்த பிரச்சனை அல்ல; மாறாக, லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மீது பெற்றோர்கள் வைத்துள்ள நம்பிக்கை சார்ந்ததாகும்.
தமிழக அரசுக்கு வைக்கப்படும் கோரிக்கைகள்:
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் எவ்வித அலட்சியத்தையும் அனுமதிக்க முடியாது என்பதால், தமிழக அரசு உடனடியாகப் பின்வரும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. குளிர்சாதனக் கிடங்குகளில் முட்டைகள் சேமிக்கப்படும் காலம் குறித்துத் தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக்கு அனுப்பப்படும் முட்டைகளின் தரம் குறித்து விநியோகத்திற்கு முன்பாகக் கடுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: “டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப அழைப்பு”.. ஜூன் மாத இறுதிக்குள் மாற்றம்.. அமைச்சர் கொடுத்த உறுதி!!
போக்குவரத்து மற்றும் விநியோகச் சீரமைப்பு:
முட்டைகள் கிராமப்புற பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்படும் போக்குவரத்து முறையையும், அதன் விநியோக நிலைகளையும் அரசு நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். மதிய உணவுத் திட்டத்தில் எவ்வித சமரசமும் இன்றி, குழந்தைகளுக்குத் தரமான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.