Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

MLA Ponnusamy: சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்!

கடந்த 2016 ஆம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கி தோல்வியை தழுவிய பொன்னுசாமி 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி உயிரிழந்த சம்பவம் சக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MLA Ponnusamy: சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்!
பொன்னுசாமி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 23 Oct 2025 14:02 PM IST

நாமக்கல், அக்டோபர் 23: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். 74 வயதான அவர் கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். ஆளும் திமுக அரசின் எம்.எல்.ஏ., உயிரிழந்த சம்பவம் சக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்பில் பொன்னுசாமி உயிரிழந்துள்ளார். இவர் ஆரம்பத்தில் தனது அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் இருந்து தான் தொடங்கினார். பின்னர் திமுகவில் இணைந்தார்.

Also Read: பசி, தூக்கம் மறந்துடுங்க.. மீண்டும் திமுக ஆட்சி.. ஸ்டாலின் அறிவுறுத்தல்!

கடந்த 2016ம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கி தோல்வியை தழுவிய பொன்னுசாமி 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். அவருடைய மறைவுக்கு திமுக தலைவர்களும், தொண்டர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் சமூக வலைத்தளம் வாயிலாகவும், நேரிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நவாஸ்கனி எம்.பி. வெளியிட்ட இரங்கல் பதிவு 

இதனிடையே பொன்னுசாமி மறைவால் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி காலியாகியுள்ளது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 முதல் 8 மாதங்கள் வரை உள்ளதால் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

Also Read: சமூக விடுதலை நீண்ட பயணம்! இதை நான் மாற்றுவேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், ‘சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அருமைச் சகோதரர் பொன்னுசாமி மறைந்த துயர செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அந்த தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் பணியாற்றிய பொன்னுசாமி மறைவு திமுகவுக்கும் தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். கட்சியின் மீதும், கலைஞர் கருணாநிதி மீதும், என் மீதும் பேரன்பு கொண்டு செயலாற்றி வந்த அவர்  நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளராக கட்சியை வளர்த்ததோடு பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்