மநீம 100% டாரச் லைட் சின்னத்தில் மட்டுமே போட்டியிடும்… பொதுச்செயலர் அருணாச்சலம்!
Makkal Needhi Maiam: சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிடம் கூடுதல் தொகுதிகள் பெறுவது மற்றும் மநீம 100 % தனி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ( மார்ச் 20) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாகவும், தனி சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அதிகளவு பங்கேற்றனர். இந்த கூட்டம் முடிவடைந்ததை அடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் பொதுச் செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முடிவை அறிவிக்க உள்ளார்.
டார்ச் லைட் சின்னத்தில் தான் மநீம போட்டியிடும்
எனவே, எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கான தொகுதிகள் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள். 100 சதவீதம் டார்ச் லைட் சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். மக்கள் நீதி மய்யத்துக்கான கூடுதல் தொகுதிகள் பங்கீடு, தனி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக அடுத்த அடுத்த பேச்சு வார்த்தையில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும். டார்ச் லைட் சின்னத்தில் தான் மக்கள் நீதி மையம் போட்டியிடும் என்பதை திமுக தலைமையிடம் மக்கள் நீதி மையம் வலியுறுத்தும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: S.P. Velumani Tamil Nadu Election: தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவாரா எஸ்.பி.வேலுமணி!




மநீம தலைமை முடிவுக்கு கட்சியினர் ஆதரவு
திராவிட முன்னேற்றக் கழக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் மக்கள் நீதி மய்யம் 2 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது. 2-ஆம் கட்ட பேச்சு வார்த்தையின் முடிவில், குறிப்பிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதைத் தொடர்ந்து, மநீம தலைவர் கமல்ஹாசனிடம் இது குறித்து தெரியப்படுத்தினோம். அதன்படி, கட்சியினர் அனைவரையும் அழைத்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில், கமல்ஹாசன் முக்கிய முடிவை எடுக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். இதற்கு கட்சியினர் அனைவரும் ஆதரவாக உள்ளோம்.
திமுக நிர்பந்தம் செய்யவில்லை
திமுக தலைமை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியது. ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பணிக்குழு அதற்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடும் என்று வலியுறுத்தியுள்ளோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக்கூறி திமுக எங்கள் நிர்பந்திக்கவில்லை. திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சின்னங்களில் போட்டியிடுவது தொடர்பாக அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் காரணங்களை தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ராமதாஸ்-சசிகலா கூட்டணி உறுதியானது… தமிழகம்-புதுச்சேரியில் இணைந்து போட்டி!