மருதமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு… விரைவில் அறிவிப்பு

Coimbatore Maruthamalai Temple: கோவை மருதமலை முருகன் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக ரூ.5.20 கோடி செலவில் இரண்டு லிஃப்ட்கள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு லிஃப்ட்டிலும் 20 பேர் பயணிக்கலாம். பேஸ்-1 திட்டத்தில் அன்னதான கூடம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மருதமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு... விரைவில் அறிவிப்பு

மருதமலை முருகன் கோவில்

Updated On: 

21 Jun 2025 10:11 AM

கோவை ஜூன் 21: கோவையின் (Coimbatore) மருதமலை முருகன் கோவிலுக்கு (Maruthamalai Murugan Temple) ஏற 150 படிக்கட்டுகள் இருந்ததால், பக்தர்களுக்கான வசதிக்காக ரூ.5.20 கோடி செலவில் 2 லிப்ட் அமைக்கும் (Lift facility) பணி நடக்கிறது. ஒரே நேரத்தில் தலா 20 பேர் செல்லக்கூடிய லிப்ட், முதலில் 12 மீட்டர் உயரம், பின்னர் 40 மீட்டர் நடைபாதை, அதன் பின் 8 மீட்டர் உயரத்தில் கோவிலுக்கு சேரும். பேஸ்-1 கட்டமாக ரூ.6 கோடியில் அன்னதானக் கூடம் உள்ளிட்ட கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. பேஸ்-2 கட்டத்தில் பழைய படிக்கட்டுப் பாதை சீரமைப்பும், 11 இளைப்பாறும் மண்டபங்களும் ரூ.10 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 85% லிப்ட் பணிகள் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2025 ஆகஸ்ட் மாதத்தில் லிப்ட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்காக லிப்ட் வசதி

கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, மலைமேல் சென்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அடிவாரத்தில் இருந்து மலைமேல் செல்ல படிக்கட்டுகள் மற்றும் சாலைகள் இருந்தாலும், 150 படிக்கட்டுகளை கடந்து 35 மீட்டர் உயரம் ஏறவேண்டும் என்பதால், மூத்த குடிமக்கள், உடல்நலக் குறைபாடுள்ளோர் உள்ளிட்டோருக்காக இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.

லிப்ட் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தில்

ராஜகோபுரம் படிக்கட்டுகள் அருகிலுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் ரூ.5.20 கோடி மதிப்பில் 2 லிப்ட்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் தலா 20 பேர் செல்லக்கூடிய இந்த லிப்ட்கள், முதலில் 12 மீட்டர் உயரம் வரை செல்லும். பின்னர், 40 மீட்டர் பக்கவாட்டு தூரம் நடந்து சென்று, அங்கிருந்து இரண்டாவது லிப்ட்டில் 8 மீட்டர் மேலே ஏறி கோவிலுக்கு செல்லும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

மருதமலை திருக்கோவில் பணிகள் ஆய்வு

பல்வேறு திட்டங்களும் முழுவீச்சில்

மேலும், பேஸ்-1 கட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பில் அன்னதானக் கூடம், பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 10 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. பேஸ்-2 கட்டத்தில், பழைய படிக்கட்டுப் பாதையை சீரமைத்தல் மற்றும் 11 இளைப்பாறும் மண்டபங்கள் உள்ளிட்ட திட்டங்கள் ரூ.10 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன.

தற்போது லிப்ட் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாம் கட்ட லிப்ட் அமைக்கும் பணிகளில் 85% நிறைவு பெற்றுள்ள நிலையில், பாறையை வெட்டும் பணிகள் உட்பட சில வேலைகள் மிச்சமுள்ளன. இவை விரைவில் முடிக்கப்பட்டு, வரும் 2025 ஆகஸ்ட் மாதம் லிப்ட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனத் துறை அதிகாரிகள் கூறினர்.