தவெக தலைவர் விஜய் பதவி ஏற்க தீக்குளித்த நபர் பலி.. சோக சம்பவம்!
Man Set Fire On Himself For Vijay | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் தொடர் சிக்கல்கள் நிலவி வந்த நிலையில், அவர் ஆட்சி அமைக்க வலியுறுத்தி தீக்குளித்த தவெக தொண்டர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியாகியுள்ளார்.
திருநெல்வேலி, மே 12 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முதலமைச்சராக பதவி ஏற்பதில் சிக்கல் நிலவி வந்த நிலையில், அவர் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என வலியுறுத்தி தீக்குளித்த தவெக தொண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மே 09, 2026 அன்று தீக்குளித்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். விஜய் முதலமைச்சராக முடியாத சூழலில் விரக்தியில் தீக்குளித்த நபர் உயிரிழந்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிக இடங்களை பெற்றும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருந்த தவெக
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக அதிகபட்சமாக 108 இடங்களை பெற்றது. இதன் காரணமாக ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்பு தவெக பக்கம் இருந்தது. ஆனால், ஆட்சி அமைக்க 118 இடங்களை பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதன் காரணமாக தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி மற்றும் ஆதரவு கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி, இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இதன் காரணமாக, தவெக ஆட்சி அமைக்கும் சூழல் உருவானது.
இதையும் படிங்க : எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்கவில்லையா முதல்வர் விஜய்? நடந்தது இதுதான்!
கட்சிகளின் ஆதரவை பெற்று ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு 4 நாட்கள் தேவைப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணகப்பட்டது. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பது குறித்த பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தான், திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இசக்கியப்பன் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், தீக்குளித்தார்.
இதையும் படிங்க : பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூட திட்டம்? முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி
தீக்குளித்ததன் காரணமாக இசக்கியப்பன் மிக கடுமையாக காயமடைந்திருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியாகியுள்ளார்.