பெண்ணுடன் தனிமையில் இருந்த நபர்.. பணம் தர மறுத்ததால் கொலை!

Coimbatore Crime News: கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை அருகே நண்பன் பாலுசாமியை, கடன் பிரச்சனை மற்றும் நகைக்காக மகாலிங்கம் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலுசாமியை, மகாலிங்கம் ஹாலோ பிளாக் கல்லால் தாக்கி கொலை செய்து, சடலத்தை கால்வாயில் வீசியதும் தெரிய வந்துள்ளது.

பெண்ணுடன் தனிமையில் இருந்த நபர்.. பணம் தர மறுத்ததால் கொலை!

பாலுசாமி - மகாலிங்கம்

Published: 

23 Sep 2025 06:37 AM

 IST

கோயம்புத்தூர், செப்டம்பர் 23: கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகைக்கு ஆசைப்பட்டு நண்பரை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்து சீரப்பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்கு கற்பக விநாயகர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவர் சொந்தமாக மீட்பு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இதற்கிடையில் கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே செயல்படும் தனியார் கல்லூரி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் இருக்கும் கழிவு நீர் கால்வாயில் சாக்கு முட்டையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்த அந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

இதில் சடலமாக கிடந்தது பாலுசாமி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் பல தகவல்கள் கிடைத்தது. அதன்படி கடந்த செப்டம்பர் 11ம் தேதி தனது இரண்டாவது மனைவி பரமேஸ்வரியிடம் தான் தொழில் ரீதியாக செல்வதாக கூறிய பாலுசாமி வெளியே சென்றுள்ளார். ஆனால் ஒருநாள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் மறுநாள் பரமேஸ்வரி தொடர்பு கொண்ட போது பாலுசாமி செல்போனை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:  அண்ணிக்களுடன் அத்துமீறிய தொடர்பு.. இளைஞர் கழுத்தறுத்து கொலை

இதனை தொடர்ந்து பரமேஸ்வரி தனது கணவர் மாயமானதாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த நிலையில் தான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் முத்து நகரில் குடியிருந்து வரும் உசிலம்பட்டியை சேர்ந்த ஆடு விற்பனையாளர் மகாலிங்கம் என்பவரை கைது செய்தனர். இதில் பாலுசாமி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வந்தது.

நண்பனை கொலை செய்த மகாலிங்கம்

நண்பர்களான மகாலிங்கமும், பாலுசாமியும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டனர். அதாவது பாலுசாமியிடம் ரூ.20 ஆயிரம் மகாலிங்கம் கடன் வாங்கியுள்ளார். இதனிடையே மகாலிங்கத்திற்கும் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு கேண்டீனில் பணி புரியும் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண்ணுடன் பாலுசாமியும் அப்போது தனிமையில் நேரம் செலவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பாலுசாமி பணம் எதுவும் தராமல் இருந்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் நிகழ்ந்து வந்துள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி அந்த பெண்ணுடன் பாலுசாமி தனிமையில் நேரம் செலவிட்ட பின்னர் போதையில் அங்கே படுத்து தூங்கியுள்ளார். அன்றைக்கும் அவர் பணம் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் பாலுசாமி கழுத்திலிருந்த இரண்டு சவரன் நகையை அந்த பெண் கழற்ற முயன்றார். அப்போது சுதாரித்த பாலுசாமி சத்தமிட்டுள்ளார்.  அப்போது அங்கு வந்த மகாலிங்கம் என்னவென்று விசாரித்த போது அப்பெண் தனது கடன் பிரச்சினை பற்றிக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Pudukkottai: பழங்குடியின மாணவன் மீது தலைமையாசிரியர் கொலைவெறி தாக்குதல்!

இதனால் அங்கிருந்த ஹாலோ பிளாக் கல்லை பாலுசாமியின் தலையில் போட்டு மகாலிங்கம் கொலை செய்துள்ளார். தொடர்ந்து சடலத்தை நைலான் சாக்கில் போட்டு கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார். பாலுசாமி பயன்படுத்தி வந்த ஃபோனை சிட்கோவில் வேலை பார்க்கும் தனது மகனிடம் கொடுத்துள்ளார்.

பாலுசாமியில் இருந்து பறித்த நகையை விற்று இருவரும் பங்கிட்டு கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து மகாலிங்கம் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடனடியாக இருந்த பெண்ணை தேடி வருகின்றனர்.