வேலைக்கு போக சொன்ன அண்ணன்… ஆத்திரத்தில் தம்பி செய்த ஷாக் சம்பவம்.. சேலத்தில் பகீர்

Salem Crime News : சேலம் மாவட்டத்தில் அண்ணனை தம்பி கொடூரமாக கொலை செய்துள்ளார். குடும்ப செலவிற்காக வேலைக்கு போக சொன்னதால், ஆத்திரம் அடைந்த தம்பி, அண்ணணை கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

வேலைக்கு போக சொன்ன அண்ணன்... ஆத்திரத்தில் தம்பி செய்த ஷாக் சம்பவம்.. சேலத்தில் பகீர்

மாதிரிப்படம்

Updated On: 

10 Sep 2025 06:41 AM

 IST

சேலம், செப்டம்பர் 10 : சேலம் மாவட்டத்தில் சகோதரரை இளைஞர் கொடூரமாக கொலை செய்துள்ளார். குடும்ப பிரச்னையில் சகோதரரை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் நடந்து வருவது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கொலை சம்பவங்களை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தான், சேலத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர அடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுதன் (22) மற்றும் சூர்யா (27). இவர்கள் இருவரும் சகோதரர்கள். இரு சகோதரர்களும் தங்கள் பெற்றோருடன் ஆத்தூரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

சூர்யா அதே பகுதியில் உள்ள டீ கடையில் வேலை செய்து வந்தார். சூர்யாவின் வருமானம் தான் குடும்பத்தின் பிரதான வருமானமாக இருந்தது. அவர்கள்னி தந்தை இறைச்சி கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தாய்க்கு மன நிலை பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தாயாரின் மருத்துவ செலவு, வீட்டு செலவுக்கு பணம் பற்றாக்குறையாக இருந்து வந்துள்ளது. இதனால், குடும்ப செலவுக்கு பங்களிக்குமாறு சூர்யா அடிக்கடி சிவசுதனை வற்புறுத்தி வந்தார். கொத்தனார் ஒருவரிடம் தற்காலிக வேலை கூட ஏற்பாடு செய்திருந்தார்.

Also Read : சினிமாவுக்கு ஆழைத்து செல்லாத கணவர்.. விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட 23 வயது இளம்பெண்..

அண்ணனை கொலை செய்த தம்பி

ஆனால் சிவசுதன் மூன்று நாட்களுக்குப் பிறகு வேலையை விட்டு வெளியேறினார். கூடுதலாக, சிவசுதன் அடிக்கடி சூர்யாவிடம் பணமும் கேட்டிருக்கிறார்.  மேலும், சூர்யா சிவசுதனை வேலைக்கு போக சொல்லியும், குடும்ப செலவுக்கு பணம் தருமாறும் பலமுறை கேட்டு சண்டையிட்டுள்ளார். இப்படியே பல மாதங்கள் சிவசுதன் செய்து வந்துள்ளார். இதனால், சூர்யா மற்றும் சிவசுதன் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. ஒருநாள் நண்பர்கள் முன்னிலையில் சூர்யா சிவசுதனைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

Also Read : கோவையில் அதிர்ச்சி.. விஷம் குடித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பிக்கு அரிவாள் வெட்டு.. நடந்தது என்ன?

இதனால், ஆத்திரம் அடைந்த சிவசுதன், சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படியே, 2025 செப்டம்பர் 8ஆம் தேதி வீட்டிற்கு வந்த சிவசுதன், சூர்யாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சூர்யா சரிந்தார். இதனை அறிந்த அவரது தந்தை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சூர்யா உயிரிழந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவசுதனை போலீசார் தேடி வருகின்றனர்.