போக்குவரத்து காவலர் உயிரிந்த வழக்கில் திருப்பம் – தவறை ஒப்புக்கொண்டு கைதான நபர்
Man Surrenders After Accident : பள்ளிக்கரணையில் போக்குவரத்து காவலர் மேகநாதன் என்பவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பக்கம் கார் ஒன்று தாறுமாறாக ஓடியிருக்கிறது. இந்த நிலையில் அவரை தனது பைக்கில் துரத்தி பிடிக்க முயன்றபோது கார் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாதிரி புகைப்படம்
சென்னை, டிசம்பர் 9 : சென்னை (Chennai) பள்ளிக்கரணை அருகே போக்குவரத்து காவலர் உயிரிழந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய நபர் தனது தவறை ஒப்புக்கொண்டு கைதாகியுள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் கார் (Car) மோதி போக்குவரத்து காவலர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணையில் போக்குவரத்து காவலர் மேகநாதன் என்பவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பக்கம் கார் ஒன்று தாறுமாறாக ஓடியிருக்கிறது. இந்த நிலையில் அவரை தனது பைக்கில் துரத்தி பிடிக்க முயன்றபோது கார் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து காவலர் பரிதாப மரணம்
போக்குவரத்து காவலர் மேகநாதன் டிசம்பர் 8, 2025 திங்கள்கிழமை நள்ளிரவு இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக கார் ஓட்டி வந்த சாய்ராம் என்பவர், வாகன தணிக்கையில் நிற்காமல் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு சந்தேகமடைந்த போக்குவரத்து காவலர் மேகநாதன், சாய்ராமின் காரை தனது பைக்கில் துரத்தி சென்றிருக்கிறார். இந்த நிலையில் பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே சாய்ராமின் காரை மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : புதுவையில் நடக்கும் விஜய் மக்கள் சந்திப்பு.. துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு.. தீவிரமாகும் விசாரணை…
அப்போது அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த சாய்ராம், காவலர் மேகநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதியிருக்கிறார். இதனால் நிலைதடுமாறிய மேகநாதன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த நிலையில் சாய்ராமின் கார் அவர் மீது ஏறியதாக கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் இதுகுறித்து தகவலளித்த நிலையில், உடனடியாக சம்வப இடத்துக்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தவறை ஒப்புக்கொண்டு கைதான நபர்
மேலும், போக்குவரத்து காவலர் மேகநாதனின் மரணத்துக்கு காரணமான சாய்ராமை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வந்தனர். இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய அடுத்த 3 மணி நேரத்தில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சாய்ராம், தான் மது குடித்திருந்ததால் வாகன தணிக்கையில் நிற்காமல் சென்றதாக கூறியுள்ளார்.
இதையும் படிக்க : கூடலூரில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் யானை.. பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு!
மேலும் தாம் இருக்கும் இடத்தை காவல்துறையினருக்கு சாய் ராம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அங்கு சென்ற பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாய்ராமை கைது செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து காவலருக்கு நேர்ந்த துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.