Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலானது; புதிய வாகன பதிவு இனி சுலபம்!!

புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது அவற்றை நேரடியாக ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு கொண்டு சென்று ஆய்வு மேற்கொள்ளும் நடைமுறை இருந்தது. இதனால் வாகன உரிமையாளர்களோ அல்லது டீலர்களோ அலுவலகத்துக்கு அவசியம் வர வேண்டியிருந்தது. அதோடு, வாகனங்களை நேரில் எடுத்துச்செல்லும்போது, அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலானது; புதிய வாகன பதிவு இனி சுலபம்!!
கோப்புப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Dec 2025 08:39 AM IST

சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களுக்கான பதிவுக்கு புதிய விதிமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனிமேல் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்ற பிரத்தியேக பயன்பாட்டு வாகனங்களை ஆர்.டி.ஓ (RTO) அலுவலகத்துக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம். இதனால், வாகனங்களை ஆர்டிஓ அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்காக, இதர செலவு என்று குறிப்பிட்ட தொகையை வாகனம் வாங்குவோரிடம் விற்பனையாளர்கள் வசூலிக்கின்றனர்.

ஆனால், மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் தற்போது கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, “சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை உரிமையாளர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்குக் கொண்டு வர தேவையில்லை” என்று திருத்தப்பட்டது.

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்தது பாஜகவின் சித்து விளையாட்டி – திருமாவளவன் விமர்சனம்..

உயர் நீதிமன்றம் உத்தரவு:

எனினும், இந்தத் திருத்தம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு ஒரு நாள் விரயம் ஏற்படுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்த நிலையில், உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு,பிரத்தியேக பயன்பாட்டு வாகனங்களுக்கு வாகனத்தை ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குக் கொண்டு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து,  தமிழகமெங்கும் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு இந்த புதிய விதியை டிசம்பர் 1 முதல் நடைமுறையில் மேற்கொள்ள போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பதிவு நடைமுறையில் முக்கிய மாற்றம்:

அதன்படி, சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்களை இனி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து, பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாற்றம் லட்சக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்குப் பெரும் சிரமத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் தற்போது 150 ஆர்.டி.ஓ மற்றும் யூனிட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 8,000 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 3,0004,000 வரை வாகனங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாங்கப்படுபவையாகும்.

இதையும் படிக்க : ஆபத்தில் ஓடியவர்கள், “தவெக குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்”.. சபாநாயர் அப்பாவு தாக்கு!!

வணிக பயன்பாடு வாகனத்திற்கு விலக்கு இல்லை:

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு பொருந்தாது. அதன்படி, வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டும் RTO அலுவலகத்திற்கு ஆய்வுக்கு கொண்டு செல்லும் நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.