Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை: மகனுக்காக என் மீது துரோகி பழி போடுவதா? மல்லை சத்யா கண்ணீர்

Vaiko Calls Mallai Sathya a Traitor: மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மீது வைகோ "துரோகி" எனக் குற்றம் சாட்டியதால் கட்சியில் பெரும் பரபரப்பு. இது வைகோவின் மகன் துரை வைகோவின் அரசியல் உயர்வுக்கான சூழ்ச்சி என சத்யா சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சென்னை: மகனுக்காக என் மீது துரோகி பழி போடுவதா? மல்லை சத்யா கண்ணீர்
மல்லை சத்யா- வைகோ Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Jul 2025 07:52 AM

சென்னை ஜூலை 15: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (Marumalarchi Dravida Munnetra Kazhagam) துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா (Deputy General Secretary Mallai Sathya) மீது வைகோ (Vaiko) “துரோகி” எனக் கூறியதை தொடர்ந்து கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு, வைகோவின் மகன் துரை வைகோவின் அரசியல் மேம்பாட்டுக்காக சூழ்ச்சியாக முன்வைக்கப்பட்டதாக மல்லை சத்யா சந்தேகம் தெரிவித்துள்ளார். “துரோகம்” என்ற சொல்லால் தன்னுடைய அரசியல் வாழ்வே நொறுங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் தன்னை ஒப்பிட்டது பெரும் மனவேதனை அளித்ததாகக் கூறினார். “விஷம் குடிக்கச் சொன்னால் குடித்து செத்துப்போயிருப்பேன்” எனவும் அவர் உருக்கமாக கூறினார். வைகோ மீது நிலைத்திருந்த நம்பிக்கை முற்றிலும் நசுங்கிவிட்டதாகவும், இது அவரது அரசியல் கெளரவத்தையே கேள்விக்குள்ளாக்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பொது வாழ்வை குலைக்கும் குற்றச்சாட்டு

மகனுக்காக, 32 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தன்னை “துரோகி” என குற்றம் சுமத்தியதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக, அதே கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வைகோ கூறிய கருத்துகள் கட்சியில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளன.

Also Read: தவெக தலைவர் விஜயுடன் இணையும் ஓபிஎஸ்..? அவரே சொன்ன தகவல்…

“துரோகி என பழி சுமத்தினார்” – மல்லை சத்யா

வைகோ கூறியதாவது, “மல்லை சத்யா கட்சி நிகழ்ச்சிகளில் எப்போதும் முகமூடி போல் இருப்பவர். அவர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது ‘மதிமுகவிலிருந்து வந்துள்ளேன்’ என்று சொல்லுவதில்லை. மாமல்லபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் என்றே தெரிவிக்கிறார். அவர் பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவை போல் எனக்கும் துரோகம் செய்துள்ளார்” என்றார்.

இந்த பேட்டிக்குப் பதிலளித்த மல்லை சத்யா, சமூக வலைதளத்தில் கண்கலங்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அறத்தை அடிப்படையாகக் கொண்ட என் அரசியல் வாழ்க்கையை வீழ்த்தும் வகையில், துரோகம் என்ற கடுமையான சொல்லை உங்கள் மகனுக்காக பயன்படுத்தியதற்கு வாடிக்கையை விட முடியவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

‘விஷம் வாங்கி குடிக்கச் சொன்னால் குடித்து செத்துப்போயிருப்பேன்’

“மறைமுகமாக அரசியல் வாழ்க்கையை முடிக்க நீங்கள் வேறு குற்றச்சாட்டையே சொல்தலாமே. அல்லது விஷம் வாங்கி குடிக்கச் சொன்னால் குடித்து செத்துப்போயிருப்பேன். ஆனால் ‘துரோகம்’ என்றால் என்னவாகும்? உங்களின் அரசியல் உயரத்திற்கு இது ஏற்றதல்ல.”

அத்துடன், “உலகமே என்னை மறந்தாலும், என் தலைவர் வைகோ மட்டும் என்னை மறக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால், அதையேத் தகர்த்துவிட்டீர்கள்” எனக் கூறிய அவர், கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நுட்பமாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த சம்பவம் மதிமுக உள்ளக அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. வைகோ-மல்லை சத்யா இடையேயான மன அழுத்தம், மகனின் அரசியல் எதிர்காலத்திற்கான முன்பதியாய் இருப்பது போன்ற விமர்சனங்களும் இணையத்தில் பரவியுள்ளன.