சென்னை: 100 கார்களை திருடி சொகுசு வாழ்க்கை… திறமையான எம்பிஏ பட்டதாரி திருடன் கைது!
Chennai Luxury car thief Arrested: 20 ஆண்டுகளில் 100 சொகுசு கார்களை திருடி, ராஜஸ்தான் மற்றும் நேபாளத்தில் விற்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். நவீன கருவிகளைப் பயன்படுத்தி பல மாநிலங்களில் கார்களை திருடி பணம் சம்பாதித்துள்ளார். சென்னை போலீசார் புதுச்சேரியில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கார் திருடன் கைது
சென்னை ஜூலை 21: ராஜஸ்தானைச் சேர்ந்த சட்டேந்திரசிங் ஷெகாவத் (Satendra Singh Shekhawat from Rajasthan), கடந்த 20 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை (Luxury cars) திருடியுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி (Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Puducherry) போன்ற மாநிலங்களில் நவீன கருவிகள் மூலம் கார்களை திருடி, சாலையில் ஓட்டிச் சென்று ராஜஸ்தான் மற்றும் நேபாளத்தில் விற்றுள்ளார். இந்த திருட்டில் அவர் பெரும் பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற சமீபத்திய திருட்டில் அவர் கைவரிசை புகுந்ததால் போலீசார் விசாரணை நடத்தி, கார் கொள்ளையன் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர். இதையடுத்து அங்கு பதுங்கி இருந்த கார் திருடனை மடக்கிப்பிடித்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர் (Chennai City Police). கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக திருடிய கார்களை தேட பலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.
அண்ணாநகரில் சொகுசு கார் திருட்டு
சென்னை அண்ணாநகர் கதிரவன் காலனியை சேர்ந்த எத்திராஜ் ரத்தினம் என்பவர், கடந்த மாதம் தனது விலை உயர்ந்த சொகுசு காரை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அதிகாலையில் வந்த மர்ம நபர் ஒருவர், நவீன கருவிகளைப் பயன்படுத்தி அந்த காரை சுலபமாக திருடிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த எத்திராஜ், அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
கண்காணிப்பு காட்சிகள் மூலம் தடம் பிடித்த போலீசார்
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து திருடனை தேடி வந்தனர். தொடர்ந்த விசாரணையில், சந்தேக நபர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சட்டேந்திரசிங் ஷெகாவத் (43) என்பவரை கைது செய்தனர்.
திறமையான பட்டதாரி திருடன்
விசாரணையில், இவர் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார் என்றும், அவரது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்றும் தெரியவந்தது. சட்டேந்திரசிங் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சொகுசு கார்களை நோட்டமிட்டு, அதனை நவீன கருவிகளைப் பயன்படுத்தி திருடி, பிறகு அதை நேரடியாக சாலையில் ஓட்டிச் சென்று ராஜஸ்தான் மற்றும் நேபாள பகுதிகளில் விற்று பணம் சம்பாதித்து வந்தார்.
ஆடம்பர வாழ்க்கைக்குப் பின்னால் திருட்டுத் தொழில்
இதுவரை அவர் 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி, அந்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். தற்போது சென்னை போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்தக் குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள், திருடிய காரைத் தேடி திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.