ராமதாஸ் நடத்தியது பொதுக்குழு அல்ல…அது ஒரு கேலிக் கூத்து…வழக்கறிஞர் பாலு அதிரடி!
Ramadoss Held In Salem Was Not Public Meeting: சேலத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் அல்ல எனவும், அது ஒரு கேலிக் கூத்து என்றும் அன்புமணி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

ராமதாஸ் நடத்தியது பாமக பொதுக்கூட்டம் அல்ல
இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒரே மேடையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற்றுள்ளது. இது ஒரு கேலி கூத்தாகும். இன்று நடைபெற்றது பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கிடையாது. கட்சியின் விதிகளின்படி, பொதுக் குழுவானது கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட வேண்டும். இந்த பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது. செயற் குழு 3 மணி நேரமும், பொதுக்குழு 20 நிமிடமும் மட்டுமே நடைபெற்றுள்ளது. பொதுக் குழுவில் ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி. கே. மணி, செயல் தலைவர் ஆகியோர் பேசவில்லை. ஆனால், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்களை பொதுக்குழு அங்கீகரிக்கிறது என்று ஜி. கே. மணி கூறியுள்ளார்.
ஒரே ஆண்டில் பாமக தலைவராக ராமதாஸ் 4 முறை தேர்வு
பொதுக் குழுவில் கட்சியின் நிறுவனர், தலைவர் ஆகியோர் பேசாமல் முதல் முறையாக இப்படி ஒரு பொது குழு நடைபெற்றுள்ளது. புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழுவில் ராமதாசை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்ததாக தெரிவித்துள்ளனர். ஒரே ஆண்டில் கட்சியின் தலைவராக 4 முறை ராமதாஸை அடுத்தடுத்து தேர்ந்தெடுத்துள்ள ஒரே வினோதம் நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க: அன்புமணி நெஞ்சில் குத்துகிறார்…கண்ணீர் சிந்தி அழுத ராமதாஸ்!
புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக் குழு தீர்மானம்
இதே போல, தலைமை நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றதாக ஒரு செய்தி கூட வெளியாகவில்லை. ஆனால், அறிவிப்பு மட்டும் வெளியானது. இதன் பிறகு செயற்குழு கூட்டத்தில் ராமதாஸை தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் நடைபெற்ற பொது குழு தீர்மானத்தின் ஆவணங்களை டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தனர்.
பொதுக்குழு என்ற ஒரு நாடகம்
ஆனால், இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்து இருந்தது. மேலும், பாமக கட்சி விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. பொது குழுவில் 3 பேர் மட்டும் பேசி விட்டு, பின்னர் நேரம் இல்லை என்று கூறி அதையும் தீர்மானமாக நிறைவேற்றிவிட்டு பொதுக் குழுவை நடத்தி விட்டதாக நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் நீக்கம்
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுவில் பசுமை தாயகம் அமைப்பின் உறுப்பினர்கள் இல்லாமல் அதன் தலைவர் சௌமியா அன்புமணியை நீக்கிவிட்டு, ஸ்ரீ காந்திமதியே எப்படி நியமிக்க முடியும். இந்த அமைப்பானது பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று தெரிவித்தார்.
மேலும் படக்க: புத்தகம் இருக்கும் கைகளில் பட்டாக்கத்திகள்.. இதற்கு யார் பொறுப்பு – எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி..