Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புத்தகம் இருக்கும் கைகளில் பட்டாக்கத்திகள்.. இதற்கு யார் பொறுப்பு – எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி..

Tiruvallur Crime: சென்னையிலிருந்து திருத்தணிக்கு புறநகர் ரயிலில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை நான்கு சிறுவர்கள் பட்டாக்கத்தியுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே இந்த வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தகம் இருக்கும் கைகளில் பட்டாக்கத்திகள்.. இதற்கு யார் பொறுப்பு – எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Dec 2025 16:47 PM IST

சென்னை, டிசம்பர் 29, 2025: படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம்தான் மேலோங்குகிறது என எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையிலிருந்து திருத்தணிக்கு புறநகர் ரயிலில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை நான்கு சிறுவர்கள் பட்டாக்கத்தியுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே இந்த வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லலாம். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள்:

போலீசார் விசாரணையில், நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், மூன்று பேர் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். மேலும், ஒருவர் பள்ளி படிப்பு காரணமாக நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. சிறுவர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த வட மாநிலத் தொழிலாளி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க: ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளிக்கு கத்தி வெட்டு…சரமாரி தாக்குதல்…4 சிறுவர்கள் கைது!

புத்தகம் இருக்கும் கைகளில் பட்டாக்கத்திகள் – எடப்பாடி பழனிசாமி:


இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம்தான் மேலோங்குகிறது.

மேலும் படிக்க: அடுத்த 7 நாட்கள்.. தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் எப்படி இருக்கும்?

அரிவாளால் தாக்கிய சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள சிறுவர்களின் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர்தானே? மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன், முதல்வர் அவர்களே?

சட்டம் ஒழுங்கை கட்டுப்பத்த வலியுறுத்தல்:

கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற மூலக் காரணமான சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், போதைப்பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.