புத்தாண்டு…மதுக்கடையில் குவிந்துள்ள மதுபானங்கள்…மது பிரியர்களே என்ஜாய்!
Alcohol Sales During New Year Celebrations: புத்தாண்டுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளிலும் குறைந்த ரகம் முதல் அதிக ரகம் வரையிலான மதுபானங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், மதுபிரியர்கள் குஷியாகி உள்ளனர். புத்தாண்டில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மதுக்கடைகளில் மதுபானங்கள் குவிப்பு
2026 ஆங்கில புத்தாண்டை வரவேற்பதற்காக பொது மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதற்காக, கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள், டிஸ்கோ உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாண்டை உற்சாகமாக வரவேற்பதற்காக திட்டமிட்டு வருகின்றனர். புத்தாண்டு என்றாலே அதற்கு முந்தைய நாள் (டிசம்பர் 31) முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அன்று இரவு சரியாக 12 மணிக்கு புதிய வருடம் பிறந்தவுடன் அனைத்து தரப்பு மக்களும் புத்தாண்டை வரவேற்று, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். இதில், தவிர்க்க முடியாத பல்வேறு பொருட்களில் மதுபானமும் ஒன்றாகும். அதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தையும், மதுவையும், மது பிரியர்களையும் பிரிக்க முடியாது. இதற்காகவே, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் அதிக அளவு மதுபானங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மதுக்கடைகளில் மது விற்பனை கொடி கட்டி பறக்கும்
ஜனவரி 1- ஆம் தேதி ( வியாழக்கிழமை) புத்தாண்டு என்பதால், அன்றைய தினம் அரசு விடுமுறையாகும். இதனால், முந்தைய நாளான டிசம்பர் 31- ஆம் தேதியை மையமாக வைத்து மது விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக, அதிக அளவு மதுபானங்கள் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்துக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டையொட்டி, சென்னையில் உள்ள மது கடைகள், ஹோட்டல்களுடன் இணைந்த பார்களில் மது விற்பனை கொடி கட்டி பறக்கும்.
மேலும் படிக்க: 2026-ல் எதிர்பாராத நிகழ்வுகள்.. நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் இவைதான்!
குறைந்த ரகம் முதல் அதிக ரகம் வரை
இதே போல, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுக் கடைகளில் மதுபான விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் குறைந்த ரகம் முதல் அதிக அளவு ரகம் வரையிலான மதுபானங்கள் குவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31- ஆம் தேதி இரவு வழக்கம் போல 10 மணிக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்பதால், இதற்கு முன்பாகவே மதுபானங்களை வாங்கி செல்வதற்கு மது பிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பிராந்தி, விஸ்கி, ரம், பீர் வகைகள்
தற்போது, தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பிராந்தி, ரம், விஸ்கி உள்ளிட்ட வகையான மதுபானங்கள் அதிக அளவு விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. இதே போல, பீர் வகைகளையும் மது பிரியர்கள் அதிக அளவு வாங்கி செல்வார்கள். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளிலும் மது விற்பனை அனல் பறக்கும். தற்போதே, சில மது கடைகளில் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது.
புத்தாண்டில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை
இதனால், மதுக்கடைகளில் மதுபானங்கள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமில்லாத அளவுக்கு மதுபானங்கள் குவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ரூ. 150 கோடி மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், புத்தாண்டில் கூடுதலாக ரூ. 100 கோடிக்கு அதாவது, ரூ. 250 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 2026 புத்தாண்டு வாழ்த்து எப்படி அனுப்பலாம்… நண்பர்கள்-உறவினர்களுக்கு இப்படி அனுப்பலாம்!