குலசை தசரா திருவிழா… சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கிருந்து தெரியுமா?

Kulasekarapattinam Dussehra Festival : குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவில்லா ரயில் அக்டோபர் 2,3ஆம் தேதிகளில் இரவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

குலசை தசரா திருவிழா...  சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கிருந்து தெரியுமா?

சிறப்பு ரயில்கள்

Published: 

02 Oct 2025 14:10 PM

 IST

தூத்துக்குடி, அக்டோபர் 02 : குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, 2025 அக்டோர் 2,3ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குலசேகரப்பட்டினத்தில் 2025 அக்டோபர் 2ஆம் தேதியான இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அடுத்தப்படியாக புகழ்பெற்றது குலசேகரப்பட்டினம். குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டப்படும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு தசரா திருவிழா குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் செப்டம்பர் 23 ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது.

தொடர்ந்து, நெல்லை., தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து விதவிதமான வேடங்கள் தரித்து வீடு, வீடாக சென்று காணிக்கைகள் பெற்று வருகின்றனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 2025 அக்டோபர் 2ஆம் தேதியான இன்று இரவு 12 மணியளவில் நடைபெறும். இதனால், குலசேகரப்பட்டினத்திற்கு பக்தர்களின் வருகை அதிகமாக காணப்படும். இதனையொட்டி, தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூருக்கு 2025 அக்டோபர் 2,3ஆம் தேதிகளில் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read : சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரங்கள்!

நெல்லை – திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

அதன்படி, ரயில் எண் (06106) 2025 அக்டோபர் 2,3ஆம் தேதிகளில் திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு 10.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், ரயில் எண் (06105) திருநெல்வேலியில் இருநது 11.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது.

Also Read : விக்கிரவாண்டியில் சோகமாக மாறிய சுற்றுலா.. கார் தீப்பிடித்து 3 பேர் பலி

இந்த ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்டுன்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இந்த ரயிலில் 10 முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.