கரூர் சம்பவம்.. மற்றொரு தவெக நிர்வாகி கைது.. புஸ்ஸி ஆனந்தை நெருங்கும் தனிப்படை?

Karur TVK Rally Stampede : கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக மற்றொரு தவெக நிர்வாகி கைதாகி உள்ளார். பிரசாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், புஸ்ஸி ஆனந்தை தனிப்படை போலீசார் தேடி. வருகின்றனர்.

கரூர் சம்பவம்.. மற்றொரு தவெக நிர்வாகி கைது.. புஸ்ஸி ஆனந்தை நெருங்கும் தனிப்படை?

கைதான தவெக நிர்வாகி

Updated On: 

30 Sep 2025 08:45 AM

 IST

கரூர், செப்டம்பர் 30 : கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைதான நிலையில், தற்போது மற்றொரு நிர்வாகி கைதாகி உள்ளார். பிரசாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். 2025 செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வந்தார். கடந்த இரு வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், 2025 செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை செய்தார். நாமக்கல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, இரவில் கரூர் வந்தார். அங்கு சுமார் 30,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். பிரச்சார பேருந்தில் ஏறி விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விமர்சனங்களையும் துண்டியது. மேலும், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தவெக தரப்பில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Also Read : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – அவதூறு பரப்பியதாக ஒரு பாஜக, 2 தவெகவினர் கைது

மற்றொரு தவெக நிர்வாகி கைது

மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மதியழகனை தனிப்படை காவல்துறையினர் 2025 செப்டம்பர் 29ஆம் தேதியான நேற்று கைது செய்துள்ளனர் . இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் தலைமறைவாக உள்ளார்.

அவரை தீவிரமாக தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக  மற்றொரு தவெக நிர்வாகி கைதாகி உள்ளார். கரூரில் நடந்த பிரசாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவர் கைதாகி உள்ளார். இவரிடம் கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர் பவுன்ராஜ் என கூறப்படுகிறது.

Also Read : கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி – 25 சமூக வலைதள கணக்கு மீது வழக்குப்பதிவு

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது

மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 சமூக வலைதள கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக தொண்டர் மற்றும் இரண்டு தவெகவினர் கைதாகினர். தொடர்ந்து, தற்போது கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்துள்ளனர்.