மனைவியை கொன்ற கணவர் – உடலுடன் மாலை வரை வீட்டிலேயே பதுங்கிய கொடூரம்

Kanyakumari Husband Kills Wife: கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் டார்வின் என்பவர் தனது மனைவி பபிதா நித்யசெல்வியை மரியாதை இல்லையென்ற காரணத்தால் கொலை செய்துள்ளார். கழுத்தை நெரித்தும், துணியால் இறுக்கியும் கொலை செய்த பின், மாலை வரை உடலுடன் வீட்டில் பதுங்கியிருந்தார்.

மனைவியை கொன்ற கணவர் – உடலுடன் மாலை வரை வீட்டிலேயே பதுங்கிய கொடூரம்

மனைவியை கொன்ற கணவர்

Published: 

29 Jun 2025 13:22 PM

 IST

கன்னியாகுமரி ஜூன் 29: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில், மரியாதை இல்லையென்ற காரணத்தால் தனது மனைவியை கணவர் டார்வின் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்வின், மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது கழுத்தை நெரித்தும், துணியால் இறுக்கியும் கொலை செய்துள்ளார். பின்னர் பயத்தில், பிணத்துடன் மாலை வரை வீட்டில் பதுங்கி இருந்தார். வெளிச்சம் இல்லாததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் கைது செய்த டார்வின், மரியாதை இல்லாததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

டார்வின் குடும்ப பின்னணி

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர்காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த டார்வின் (46) என்பவர், தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி பபிதா நித்யசெல்வி (39) என்பவரும், 9 வயதுடைய பென்குரூஸ் மற்றும் 7 வயதுடைய டிக்ஸ்மெரின் என இரு மகன்களும் உள்ளனர். அவர்களில் பென்குரூஸ், கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் தங்கி படித்து வருகிறார். டிக்ஸ்மெரின், தாய்மாமாவின் வீட்டில் தங்கி இருந்ததால், அந்த நாளில் டார்வின் மற்றும் பபிதா நித்யசெல்வி ஆகியோர் இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர்.

மனைவியை கொன்ற கணவர்

நேற்று (2025 ஜூன் 28) காலை முதல் மாலை வரை டார்வினின் வீடு பூட்டியிருந்தது. இரவு நேரத்திலும் வீட்டில் எந்தவிதமான விளக்கும் எரியாததைக் காண்பித்த அக்கம்பக்கத்தவர்கள் சந்தேகத்துடன் வீட்டைச் சென்றபோது, அதிர்ச்சிக்குரிய காட்சி தெரியவந்தது. பபிதா நித்யசெல்வி கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். அந்த நேரத்தில் டார்வின் பதற்றத்துடன் காணப்பட்டார். தகவலறிந்த கருங்கல் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

உடலுடன் மாலை வரை வீட்டிலேயே பதுங்கிய கொடூரம்

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், டார்வினை பிடித்து கேட்டுப் பார்த்தபோது, அவர் தான் மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதிகாலையில் ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்த டார்வின் தனது மனைவியின் கழுத்தை நெரித்தும், துணியால் இறுக்கியும் கொன்றதாக கூறியுள்ளார். கொலை செய்த பின், பயத்தில் வெளியே செல்ல முடியாமல், உடலுடன் மாலை வரை வீட்டிலேயே பதுங்கியிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.

மனைவியிடம் மரியாதை இல்லை என்பதே காரணமா?

மனைவியின் உடலை இரவிலாவது மறைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் குழப்பத்தில் திக்குமுக்காடிய டார்வின், வெளிச்சம் எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்ததால் சந்தேகத்துக்கிடையாகி பொதுமக்கள் அதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, டார்வினை கைது செய்து, கொலையை மறைக்க அவர் தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்டது. மனைவியிடம் மரியாதை இல்லை என்ற காரணமே இந்த கொலையின் பின்னணி எனத் தெரிவித்துள்ள டார்வினின் வாக்குமூலத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த கொடூரச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!
தமிழகத் தேர்தல் களம்.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு உயர்வு விகிதம்..
குடிக்க தண்ணீர் கேட்பது போல நாடகம்.. மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை அபேஸ்.. 2 கல்லூரி மாணவிகள் கைது!
“விரக்தியின் விளிம்பில் திமுக”.. அதிமுக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முன்பே தயார் நிலையில் பாடப்புத்தகங்கள்.. ஜூன் 1-இல் மாணவர்களுக்கு விநியோகம்!
போலீஸ் வாகனங்களில் வருகிறது புதிய மாற்றம்.. இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்