ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கனிமொழி – குடும்பத்தினருக்கு ஆறுதல்
Kanimozhi Attends Funeral of Honor Killing Victim Kavin : திருநெல்வேலி இளைஞர் அருகே மாற்று சமூக பெண்ணை காதலித்ததாக கூறி கவின் என்ற இளைஞர், பெண்ணின் சகோதரரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் கவினின் இறுதிச்சடங்கில் மக்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்று, அஞ்சலி செலுத்தினார்.

கவினின் இறுதி சடங்கில் கனிமொழி எம்பி
திருநெல்வேலி, ஆகஸ்ட் 1 : கடந்த ஜூலை 27, 2025 அன்று திருநெல்வேலி (Tirunelveli) அருகே மாற்று சமூக பெண்ணைக் காதலித்ததாகக் கூறி ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தமிழக அரசால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கவின் செல்வகணேஷின் இறுதிச் சடங்கு திருச்செந்தூர் (Tiruchendur) அருகே ஆறுமுகமங்கலத்தில் ஆகஸ்ட் 1, 2025 அன்று நடைபெற்றது. அதில் தமிழக அரசு சார்பாக மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி – திருச்செந்தூர் ஆறுமுகமங்கலத்தில், ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். முன்னதாக கவின் வீட்டிற்கு நேரில் சென்ற கனிமொழி அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.
கவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கனிமொழி
தூத்துக்குடி – திருச்செந்தூர் ஆறுமுகமங்கலத்தில், ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன். pic.twitter.com/hDZphjhHfN
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 1, 2025
இதையும் படிக்க : கவின் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! நாங்க உண்மையா காதலிச்சோம்.. சுபாஷினி வெளியிட்ட வீடியோ..
கவின் கொலை எப்படி நடந்தது?
கடந்த ஜூலை 27, 2025 அன்று, தூத்துக்குடியை சேர்ந்த கவின் செல்வகணேஷ், தனது தாத்தாவை பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வந்திருந்தார். இதை அறிந்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினை தனியாக அழைத்து சென்று அவரை தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக தெரியவருகிறது. பின்னர் அவர் நேரடியாக காவல்துறையில் சரணடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை கைது… விசாரணை தீவிரம்
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்ட சுபாஷினி, கவினும் நானும் உண்மையாக காதலித்தோம். கவின் என்னிடம் சிறிது காலம் தேவைப்படுவதாக கூறியதால் எங்கள் வீட்டில் சொல்லவில்லை. அதற்குள் இப்படியான சம்பவம் நடந்துவிட்டது. இதற்கும் எனது பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அவரது வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சுர்ஜித்தின் அப்பா கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து கவினின் உடலை வாங்க அவர்களது உறவினர்கள் முன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.