தூத்துக்குடி மாணவி வன்கொடுமை வழக்கு… மகாநதி பட வசனத்தை பகிர்ந்து கமல்ஹாசன் விமர்சனம்
Mahanadhi Dialogue Remark : தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மகாநதி பட வசனத்தை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன்
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் என்ற பகுதியை சேர்ந்த மாணவி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கடந்த மார்ச் 10, 2026 அன்று வெளியே சென்ற பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மாணவியை எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில் சந்தேகமடைந்த அவரது தந்தை குளத்தூர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு தெரிவித்திருக்கின்றனர் இதனையடுத்து அவர் மார்ச் 11, 2026 அன்று விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
தூத்துக்குடி மாணவி வன்கொடுமை வழக்கு
இந்த நிலையில் மார்ச் 11, 2026 அன்று பிற்பகல் வேடநத்தம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் காயங்களுடன மாணவி சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக மாணவியை மீட்டு பிரேத பரிசோதனைககாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி காணவில்லை என மாணவியின் தந்தை புகாரளித்த நிலையில் குளத்தூர் காவல்நிலைய காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உடனடியாக காவல்துறையினர் நடடிக்கை எடுத்திருந்தால், மாணவியை காப்பாற்றியிருக்க முடியும் என மாணவியின் குடும்பத்தார் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : திருச்சி மாணவி பொய் புகார்? சிசிடிவி அடிப்படையில் காவல்துறை தரப்பில் தகவல் – என்ன நடந்தது?
இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. காவல்துறையின் தோல்வி என பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யும்வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என மாணவியின் உறவினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாநதி பட வசனத்தை பகிர்ந்து கமல் கண்டனம்
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே…
— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2026
இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது. இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான், அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்.
இதையும் படிக்க : 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு கனவிலும் நினைத்திடாத தண்டனை.. நெல்லை போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.