Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மேடையில் கண்கலங்கிய மாணவி.. புது வீடு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி பதிவு!

Tamil Nadu CM Stalin Gift To Student : கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி பிரேமா தனது ஒழுகும் வீடு குறித்து மேடையில் உருக்கமாக கண்ணீர் விட்டு பேசியிருந்தார். இந்த நிலையில், மாணவி கூறிய 24 மணி நேரத்திற்குள் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி அறிவித்துள்ளார்.

மேடையில் கண்கலங்கிய மாணவி.. புது வீடு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்..  நெகிழ்ச்சி பதிவு!
முதல்வர் ஸ்டாலின்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Sep 2025 16:30 PM IST

சென்னை, செப்டம்பர் 26 : தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி, தனது அப்பா ஒழுகும் வீட்டில் இருப்பதாக கண்ணீர்விட்டு உணர்ச்சி பொங்க பேசினார். மாணவி தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு புதிய வீட்டை ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் நான் முதல்வன், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திங்களின் சாதனைகளை விளக்கும் வகையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா சென்னையில் 2025 செப்டம்பர் 25ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந் நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், நடிகர் சிவகாரத்திகேயன், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதோடு, துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி எம்.பி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியிலி கலந்து கொண்ட மாணவர்கள் உணர்ச்சி பொங்க, தங்கள் கஷ்டங்களையும், இந்த திட்டங்களால் நாங்கள் எப்படி பயனடைந்தோம் என்பதையும் விவரித்தனர். இது அங்கிருக்கும் பலரையும் உணர்ச்சி பொங்க வைத்தது.

Also Read : காலை உணவு திட்டம்… மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு 70% குறைவு – முதல்வருக்கு மருத்துவர் அருண் குமார் நன்றி

மேடையில் கண்கலங்கிய மாணவி

குறிப்பாக, அந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மாணவி பிரேமா தனது முதல் சம்பளத்தை மேடையில் தந்தையிடம் கொடுத்தார். மேலும், நான் முதல்வன் திட்டத்தால் எப்படி பயன்பெற்தேன் என்பதை கண்ணீர் விட்டு கூறினார். அதாவது, “நான் கல்லூரியில் படிக்கும்போது, விடுதியில் தங்கி இருந்தேன்.

மழை நேரத்தில் நான் பாதுகாப்பாக இருப்பேன். ஆனால், எங்களது வீடு மழை நேரங்களில் ஒழுகும்.  அந்த நேரத்தில் அப்பா, அம்மா எப்படி இருப்பார்கள் என நினைத்துக் கொண்டே இருப்பேன். இதனால், அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என பேசி இருந்தார்.

புது வீடு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்


இது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த மாணவியின் தந்தை வீடு ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், “ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்.

Also Read : சினிமாவில் இருந்து என்ன அனுப்பிட்டீங்கனா… முதல்வர் முன் சிவகார்த்திகேயன் பேச்சு

எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று கூறினார்.