தனி நபர் வருமானத்தில் தமிழகம் இரண்டாவது இடம்.. புள்ளிவிவரத்துடன் தெரிவித்த மத்திய அரசு..
Per Capita Income In Tamil Nadu: கர்நாடக மாநிலத்தின் தனி நபர் வருமானம் ரூ.2, 05,605 ஆக உள்ளது. அதாவது நாட்டிலேயே முதல் இடத்தில் கர்நாடகா உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் தனி நபர் வருமானம் ரூ. 1,96,309 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜூலை 23, 2025: இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனிநபர் வருமானம் என்பது ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 399 ஆக உள்ளது. மக்களவையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி கடந்த கடந்த 2014 -2015 வரை தேசிய அளவில் தனி நபர் வருமானம் ரூ.72,805 ஆக இருந்தது. இது 2024- 2025 ஆம் நிதியாண்டில் ரூ.1,14,710 ஆக உயர்ந்துள்ளது. இது 57.5 சதவீதம் அதிகம் ஆகும். அதேநேரத்தில் தேசிய அளவில் இந்த வளர்ச்சி சரிசமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கர்நாடக மாநிலத்தின் தனி நபர் வருமானம் ரூ.2, 05,605 ஆக உள்ளது. அதாவது நாட்டிலேயே முதல் இடத்தில் கர்நாடகா உள்ளது.
தனி நபர் வருமானத்தில் தமிழ்நாடு 2வது இடம்:
அதனை தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் தனி நபர் வருமானம் ரூ. 1,96,309 ஆக உள்ளது. ஒடிசா, கர்நாடகா, தமிழகம், தெலுங்கானாவில் தனி நபர் வளர்ச்சி விகிதம் இரு மடங்காக அதிகரித்த நிலையில், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குறைவானதாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் திராவிட மாடல் அரசின் புதிய சாதனை!
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடம்!
புள்ளியில் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சகப் புள்ளி விவரங்கள்படி, மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் அறிவிப்பு!#TNDIPR pic.twitter.com/PPRyoXA7qI
— TN DIPR (@TNDIPRNEWS) July 22, 2025
அதில், ” திராவிட மாடல் அரசு 2024-2025ஆம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது என பாராட்டப்படுகிறது. இப்படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சங்கள் அடைந்துவரும் வேளையில் மற்றும் ஒரு மணிமகுடத்தை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குச் சூட்டியுள்ளது.
21.7.2025 அன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1,14,710. இந்திய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழ்நாடு ரூ.1,96,309/-பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: 10 உரிமைகளை மீட்பதே நோக்கம்.. 100 நாள் நடைப்பயணத்தை அறிவித்த அன்புமணி..
2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொடர்ந்து அடைந்துவரும் வளர்ச்சிகள் சாதனைகள் ஆகியவற்றை எவராலும் மறைத்திட முடியாது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு புதிய திட்டங்களை வழங்காத நிலையிலும் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படவேண்டிய நிதிகளை அளிக்காத நிலையிலும் சிறந்த நிர்வாகத் திறன்களாலும் சீரிய தொலைநோக்குத் திட்டங்களாலும் தமிழ்நாடு தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு சான்றுதான் நாடாளுமன்றத்தில் ஒன்றிய இணையமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது