“என்டிஏ கூட்டணிக்கு டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்”.. இபிஎஸ் உற்சாக வரவேற்பு!!

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியில் இணையாமல், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்பு கூட்டணியில் இணைந்துள்ளார்.

என்டிஏ கூட்டணிக்கு டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்.. இபிஎஸ் உற்சாக வரவேற்பு!!

டிடிவி தினகரனை வரவேற்ற இபிஎஸ்

Updated On: 

21 Jan 2026 13:20 PM

 IST

சென்னை, ஜனவரி 21: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்னிலையில், இன்று காலை NDA கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்தது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு, டிடிவி தினகரனும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க: ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்..

டிடிவி தினகரனுக்கு வாழ்த்து சொன்ன இபிஎஸ்:

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின், சபரீசன் ஊழலை அம்பலப்படுத்துவோம்:

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், இன்று யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியில் இணையாமல், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்பு கூட்டணியில் இணைந்துள்ளார். தொடர்ந்து, கூட்டணியில் இணைந்த பின் பியூஷ் கோயல் மற்றும் டிடிவி தினகரன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும் படிக்க: தவெக தேர்தல் அறிக்கை குழு லிஸ்டில் பெயர் மிஸ்ஸிங்.. விஜய் மீது செங்கோட்டையன் அப்செட்?.. வெளியான விளக்கம்!!

அப்போது பேசிய பியூஷ் கோயல், “தினகரன் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிக்கு வந்துள்ளார். 2004 – 2007 எம்பி ஆக இருந்த போது சிறப்பாக பணியாற்றினார். தமிழ்நாடு மக்களையும், கலாச்சாரத்தையும் வஞ்சிக்கும், தேசவிரோத திமுக கூட்டணி அரசை அகற்ற நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்துள்ளோம். மு.க.ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோரின் ஊழல்கள் தமிழ்நாடு மக்கள் முன் அம்பலப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

 

இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?