AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தை உலுக்கிய ஜெம் வீரமணி வழக்கு.. புழல் சிறையிலேயே வைத்து எஸ்.ஐ.டி. போலீசார் விசாரணை!!

Gem Veeramani POCSO Case: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியிடம் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு புழல் சிறையிலேயே வைத்து எஸ்.ஐ.டி (SIT) சிறப்புப் படை போலீசார் 2 நாள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹேண்டிகேம் வீடியோக்கள் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தை உலுக்கிய ஜெம் வீரமணி வழக்கு.. புழல் சிறையிலேயே வைத்து எஸ்.ஐ.டி. போலீசார் விசாரணை!!
ஜெம் வீரமணி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Oct 2026 14:22 PM IST

சென்னை, அக்.16: தமிழகத்தையே உலுக்கிய சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ (POCSO) வழக்கு விசாரணையில் நாளுக்கு நாள் திடுக்கிடும் திருப்பங்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல தொழில் அதிபரும், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான வீரமணி மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஒரு வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது வழக்கிலும் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிக்க: சென்னை காசிமேட்டில் அதிர்ச்சி.. 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தவெக நிர்வாகி மீது பாய்ந்தது போக்சோ!!

சிக்கிய ஹேண்டிகேம் ஆதாரங்கள்:

இருப்பினும், வீரமணியின் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை வெளியில் அழைத்துச் செல்லாமல் சென்னை புழல் சிறையிலேயே வைத்து எஸ்.ஐ.டி (SIT) சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் எஸ்.ஐ.டி போலீசார் நடத்திய சோதனையின் போது, மிக முக்கியமான ஆதாரமாக ஒரு நவீன ஹேண்டிகேம் கேமரா கைப்பற்றப்பட்டது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய போது, அவற்றை மறைமுகமாக வீடியோ பதிவு செய்து வைத்திருப்பது அந்த ஹேண்டிகேம் ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் வாக்குமூலம்:

அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பல சிறுமிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். குறிப்பாக, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளுக்கு நேரில் சென்ற சிறப்புப் படையினர், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து வாக்குமூலங்களை முறைப்படி பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது சிறையில் வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் அதிரடி திருப்பம்.. கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்த மோப்ப நாய்.. 5வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை!!

அதிகாரிகள் தொடர்பு குறித்து விசாரணை:

பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பறித்தது மற்றும் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாகக் கைமாறியது தொடர்பாகவும் வீரமணியிடம் எஸ்.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாருக்கெல்லாம் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது, யார் யார் மூலமாக இந்தப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன என்பது குறித்த முக்கிய விவரங்கள் ஏற்கனவே காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சட்டவிரோதச் செயல்களுக்குப் பின்னணியில் காவல் துறை உயரதிகாரிகளுக்குப் பணம் கைமாறியதா, இந்த கொடூர குற்றங்களுக்கு யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள், எத்தனை ஆண்டுகளாக இந்த அநீதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து, நாளைய மாலை வரை சிறையிலேயே வைத்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

Follow Us