AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராதாகிருஷ்ணன் முதல் அமுதா வரை.. 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமனம்..

IAS Officers As Spokesperson: தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளில் செயலாளர்கள் துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்து தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் முதல் அமுதா வரை.. 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமனம்..
கோப்பு புகைப்ப்டம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Jul 2025 13:55 PM IST

சென்னை, ஜூலை 14, 2025: தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் முக்கிய தகவல்கள் திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும் புற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த இந்தியா ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ககந்திப் சிங் பேடி, தீரஜ் குமார் மற்றும் அமுதா இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இந்த நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளும் மக்களிடையே மிகவும் பரீட்சியமானவர்கள்.

எந்த அதிகாரிக்கு எந்த துறை?

அதேபோல் இந்த நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் யாருக்கு எந்த துறை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இராதாகிருஷ்ணனிற்கு எரிசக்தி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்து துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, வெளிநாடு வாழ் தமிழர் நலன், பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, கைத்தறி கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறை, மனித வள மேலாண்மை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ககன்தீப் சிங் பேடிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தீரஜ் குமாரிற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை. கடைசியாக அமுதாவிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, ஆதிதிராவலர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை, சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலை துறை, சிறப்பு திட்ட செயலாற்று துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்கள் மக்களுக்கு எடுதுரைக்க உதவும்:

அதேபோல் அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளில் செயலாளர்கள் துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்து தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அச்செய்திகளின் உண்மை தன்மையை உறுதி செய்த பின் தலைமை செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை வெளியிடுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசன் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும் சரியான தகவல்களை உரிய நேரத்திலும் மக்கள் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us