வைகோவுக்கு மாநிலங்களவையில் வாய்ப்பு வழங்காதது வருத்தம்- துரை வைகோ

MDMK's Vaiko: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் 30 ஆண்டு கால பாராளுமன்றப் பணிகள், தமிழக அரசியல் நிலைப்பாடு, கூட்டணி உறுதிப்பாடு, மத்திய அமைச்சர் பதவியை நிராகரித்தது உள்ளிட்ட முக்கிய விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. மாநிலங்களவை வாய்ப்பு கிடைக்காதது குறித்த வருத்தத்தையும், வரும் சட்டமன்றத் தேர்தல் திட்டங்கள் பற்றியும் இக்கட்டுரை விளக்கமாகக் கூறுகிறது.

வைகோவுக்கு மாநிலங்களவையில் வாய்ப்பு வழங்காதது வருத்தம்- துரை வைகோ

திருச்சியில் துரை வைகோ பேட்டி

Updated On: 

30 May 2025 18:58 PM

 IST

திருச்சி மே 30: ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் (MDMK Principal Secretary) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ(Member of Parliament Durai Vaiko), 2025 மே 30 இன்று திருச்சியில் (Trichy) செய்தியாளர்களிடம் பேசினார். அதில், முன்னாள் எம்.பி. வைகோவின் சிறப்புகள், தமிழக அரசியல் நிலைமை, கூட்டணி நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களைத் தெரிவித்தார். முன்னாள் எம்.பி. வைகோவுக்கு (Former MP Vaiko) மாநிலங்களவை வாய்ப்பு வழங்கப்படாதது மிகுந்த வருத்தம் என தெரிவித்தார். 30 ஆண்டுகள் பாராளுமன்ற சேவை செய்தவர், மத்திய அமைச்சர் பதவியை மூன்று முறை தவிர்த்தவர் என்றார்.

பாராளுமன்ற புலி வைகோவின் பணி சேவை வரலாறு

வைகோ, 1978ஆம் ஆண்டு, 34-வது வயதில் பாராளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேல் இரு அவைகளிலும் பணியாற்றியுள்ளார். நதி நீர் இணைப்புச் சட்டத்தை முன்வைத்து, அந்த காலத்தில் யாரும் சிந்திக்காத நேரத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்தவர் என்ற பெருமையும் அவருக்கே உண்டு.

வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது ஊதியத்துடன் விடுமுறை (மே 1), என்.எல்.சி தனியார்மயத்தை எதிர்த்தல், ரெயில்களில் டி.டி.ஆர் வசதிகள், பாராளுமன்றத்தில் அம்பேத்கர் படம் வைக்க வலியுறுத்தல், ஈழத் தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தல் என பன்முகப் பணிகள் இவரின் சாதனைகளை வலியுறுத்துகின்றன.

இந்தி திணிப்பு எதிர்ப்பு: முதற்காலம் முதல் தொடரும் மும்மொழி நிலைபாடு

1978-ல் முதன் முறையாக நாடாளுமன்றம் சென்றபோதே ஹிந்தி திணிப்புக்கு எதிராக பேசிய வைகோ, தற்போது 81-வது வயதிலும் மாநிலங்களவையில் தொடர்ந்து அதே கொள்கையுடன் குரல் கொடுத்துள்ளார். மத்திய அமைச்சர்பதவி மூன்று முறை வாய்ப்பாக வந்தபோதும் அதை நிராகரித்தவர் என்றும், பதவிக்கு விருப்பம் இல்லாத தலைவருக்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாதது வருத்தமளிப்பதாகவும் துரை வைகோ தெரிவித்தார்.

துரை வைகோ ஆதங்கம்

மக்கள் பணி தொடரும்; கூட்டணி நிலை தொடரும்

“பொன் குடம் உடைந்தாலும் அது பொன் குடம் தான்; வைகோவுக்கு பதவி பொருட்டல்ல, மக்கள் பணி தான் முக்கியம்,” என கூறிய அவர், கடந்த ஆண்டு மாநிலங்களவை பதவிக்காகவே கேட்டிருந்தோம் என்றும், ஆனால் தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். இதைத் தாண்டி தமிழ்நாட்டின் நலனுக்காக கூட்டணியில் தொடருவதாகவும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து அவர் மற்றும் கட்சி தலைமையே முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார்.

பணமதிப்பிழப்பு தேவையற்ற நடவடிக்கை: வைகோ

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் எந்த நல்ல பலனும் கிடைக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் தேவையற்றவை எனவும் வைகோ கூறினார்.

ம.தி.மு.க. பொதுக்குழு 2025 ஜூன் 22-ல்

வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க, 2025 ஜூன் 22-ஆம் தேதி ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்மொழி சிறப்பு குறித்து கருத்து

தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி என மொழியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதை கமல் கூறுவது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால் தற்போது இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது என்றும் வைகோ கூறினார்.

நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி

“பெண்கள் வாழ முடியாத மாநிலம் தமிழ்நாடு என கூறும் பா.ஜ.க.வைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை பார்த்தால்தான் உண்மை தெரியும். இந்தியாவிலேயே குறைந்தபட்ச பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் மாநிலம் தமிழகமே,” என அவர் சாடினார்.

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை