காவலர்கள் வார விடுமுறை எடுக்க புதிய செயலி.. இதன் சிறப்பம்சம் என்ன?
Police Weekly Off App: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத விதமாக காவலர்களின் வார விடுமுறையை சரியான முறையில் எடுக்க உறுதி செய்யும் வகையில் செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை காவல் ஆய்வாளரால் நிராகரிக்கப்பட்டால், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, ஜூலை 12, 2025: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக காவலர்கள் வார விடுமுறையை எடுக்க வசதி செய்யும் வகையில் ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு காவலரின் வார விடுமுறை காவல் ஆய்வாளரால் நிராகரிக்கப்பட்டால், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இது தமிழக காவல்துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறையை பொருத்தவரையில் வார விடுமுறை கிடைப்பது என்பது பல்வேறு காரணங்களால் தள்ளிப் போகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது. வார விடுமுறை இன்றி தொடர்ச்சியாக பணியாற்றும் காரணத்தால் காவலர்களுக்கு மன உளைச்சல் வேலை அழுத்தம் ஏற்படுகிறது.
வார விடுமுறைக்கு சிறப்பு செயலி:
அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத விதமாக காவலர்களின் வார விடுமுறையை சரியான முறையில் எடுக்க உறுதி செய்யும் வகையில் செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் ஒரு காவலர் தனது வார விடுமுறை தேதியை பதிவு செய்வார். அந்த விடுமுறை அனுமதி என்பது காவல் ஆய்வாளர் பரிசீலனைக்கு செல்லப்படும்.
Also Read: 27 ஆண்டுகளுக்கு பின் பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி? டிஜிபி ஷங்கர் ஜிவால் விளக்கம்!
உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் வகையில் வடிவமைப்பு:
அங்கு அந்த காவல் ஆய்வாளர் அந்த வார விடுமுறையை நிராகரித்தால் அது உடனடியாக தானாகவே மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு செல்லும். அங்கும் அந்த வார விடுமுறைக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் அது நேரடியாக காவல் கண்காணிப்பாளர் எஸ் பி அலுவலகத்திற்கு செல்லும்.
Also Read: பா.ம.க.வில் உள்-கட்சி மோதல்: ராமதாஸ் சமூக வலைத்தள கணக்குகள் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டு
அங்கு அந்த வார விடுமுறையை பரிசீலனை செய்து நிராகரிக்கப்படுவதோ அல்லது அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த செயலி மூலம் கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய காவலர்கள் கூட தங்களது வார விடுமுறையை சரியாக எடுக்க முடியும். பாதுகாப்பு பணிகள். அரசு நிகழ்ச்சிகள். அதிகாரப்பூர்வ பணிகள் என பல்வேறு காரணங்களால் வார விடுமுறை தள்ளி போனாலும் அதனை வேறு ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது
தமிழகத்தில் முதன்முறையாக இந்த செயலி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் இது அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.