கள்ளக்காதலால் மருத்துவ மாணவி கொலை…கைதான தந்தை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்!
Medical Student Murder Case: சேலத்தில் ஓமியோபதி மருத்துவ மாணவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்கு மூலத்தை அளித்துள்ளார். இதில், திடுக்கிடும் காரணங்கள் உள்ளன.

மருத்துவ மாணவி கொலையில் தந்தை கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் வரதராஜன் மகள் வர்ஷினி (22 வயது) இவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஹோமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 7- ஆம் தேதி மாணவி வர்ஷினி தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவரது தந்தை வரதராஜன் சேலத்துக்கு மகளை பார்ப்பதற்காக வந்து சென்றதும், அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த வரதராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இதில், சேலத்தில் மறைந்திருந்த அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கைதான தந்தை அளித்த பரபரப்பு வாக்கமூலம்
இந்த விசாரணையில், அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். இதில், எனது மகள் வர்ஷினி 12- ஆம் வகுப்பு படிக்கும் போது, டேக்வாண்டோ பயிற்சியாளருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். அந்த பயிற்சியாளருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். திருமணமானவரை எதற்காக காதலிக்கிறாய் என்று எனது மகளை கண்டித்தேன். ஆனால், அவள் எனது பேச்சை கேட்கவில்லை. இதன் பின்னர், 12-ஆம் வகுப்பு படித்து முடித்த அவளை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து ஓமியோபதி மருத்துவம் படிக்க வைத்தேன்.
மேலும் படிக்க: மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பு… அரசு ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்
திருமணமானவருடனான காதலை கைவிட வலியுறுத்தல்
ஆனால், அப்போதும் அவள் காதலை கைவிடாமல், ஊருக்கு வந்த போதெல்லாம் அந்த பயிற்சியாளருடன் ஊர் சுற்றி வந்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், சேலத்தில் எனது மகள் வர்ஷினி தங்கியிருந்த அறைக்கு பார்க்க சென்றேன். அப்போதும், அவளிடம் காதலை கைவிடுமாறு கெஞ்சினேன். ஆனால், எனது பேச்சை அவள் சிறிதளவும் கேட்கவில்லை. இதனால், கடும் ஆத்திரம் அடைந்த நான் எனது மகளை அடித்தபோது, கீழே விழுந்தாள்.
தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்தேன்
அப்போது, அவரது முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். பின்னர், அங்கிருந்து அவரது செல்போனை எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினேன். அங்கு, வடபழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து விட்டு, திருப்பதி மற்றும் திருவண்ணாமலைக்கு 2 முறை சென்று வந்தேன். எனது மகள் கொலை சம்பவம் வெளியே தெரிந்த பின்னர், போலீசார் என்னை தேடுவதை அறிந்த நான், நீதிமன்றத்தில் சரணடையலாம் என்று நினைத்தேன். அதன்படியே, நான் சேலத்துக்கு வந்திருந்தேன். அப்போது, என்னை போலீசார் கைது செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சென்னையில் பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த மாணவனால் பரபரப்பு – என்ன நடந்தது?