குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்.. தமிழக அரசு உத்தரவு

Electric vehicle: 750 சதுர மீட்டர் குடியிருப்புகளுக்கும், 300 சதுர மீட்டர் வணிக இடங்களுக்கும் மின்சார வானங்களுக்கான சார்ஜிங் வசிதி இருப்பது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு வழிகளிலும் மின்சார வாகன பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.

குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்.. தமிழக அரசு உத்தரவு

மின்வாகன சார்ஜிங்

Updated On: 

09 Nov 2025 13:07 PM

 IST

சென்னை, நவம்பர் 09: குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் திருத்தம் மேற்கொண்ட தமிழக அரசு, தற்போது அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, சுற்றுச் சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களும் பைக், கார் என எதுவாக இருந்தாலும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு நிகராக இல்லையென்றாலும், மின்சார வாகனங்களுக்கு மாறும் போக்கு முன்பு இருந்ததை விட தற்போது நன்கு அதிகரித்து காணப்படுகிறது. முதலில் அதன் பயன்பாடு குறித்த அச்சம் இருந்தது. தற்போது அதன் மீதான அச்சம் விலகி, அன்றாட பயன்பாட்டுக்கு அவசிய தேவை என்ற அளவிற்கு நிலைமை மாறி வருகிறது.

Also read: Delhi Air Quality : காற்று மாசு காரணமாக திணறும் டெல்லி.. தீபாவளிக்கு பிந்தைய நிலை என்ன?

அதிகரிக்கும் மின் வாகன பயன்பாடு:

மின் வானகப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அதேநேரத்தில், வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதற்கு ஏற்ப, அந்த வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு வசதியாக நகரப் பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதும் அத்தியாவசியமாகி உள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் சுமார் 500 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நகரப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இந்த சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், முதல் கட்டமாக சென்னை முதல் கோயம்புத்தூர் வரையிலும், சென்னை முதல் கன்னியாகுமரி வழித்தடத்திலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதோடு, நகரப் பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மையங்கள் மூலம், வாகனங்களின் பேட்டரியில் சார்ஜ் முழுவதும் குறைந்து விட்டால் உடனடியாக வேறு பேட்டரி மாற்றி கொள்ளலாம். தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையங்கள் அமைப்பது மட்டுமின்றி ஏற்கெனவே உள்ள தனியார் சார்ஜிங் மையங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை தீர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், தற்போது சார்ஜிங் வசதிகளையும் அதிகப்படுத்தினால், அதன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். அதோடு, சென்னை போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள பெரும் நகரங்களில் மின் வாகனங்களை ஊக்கப்படுத்தி, அவற்றை அதிகப்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாடு குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது குறையும் தன்மை உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

Also read : 22 வாரங்களில் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை.. மருத்துவர்கள் பெருமிதம்!

மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்:

அந்தவகையில், குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, 750 சதுர மீட்டர் குடியிருப்புகளுக்கும், 300 சதுர மீட்டர் வணிக இடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. மின்சார வாகன பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.