12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை.. Total Failure மாடல் அரசு – எடப்பாடி பழனிசாமி காட்டம்..
Edappadi Palniswami: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகளில் தற்போது கோதுமை விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, நவம்பர் 9, 2025: தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ரேஷன் கடைகளில் குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இதனை மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மாதந்தோறும் பொருட்கள் விநியோகம்:
ஆனால் ரேஷன் கடைகளைப் பொருத்தவரையில், அவ்வப்போது அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்துவருகிறது. இந்த கடத்தப்பட்ட ரேஷன் பொருட்கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனைத் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: ரூ.2 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்தி கொலை செய்த நபர்…. சுட்டுப்பிடித்த போலீசார்… ஓசூர் அருகே பரபரப்பு
மேலும் தற்போது ரேஷன் கடைகளில் புதிய நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ரேஷன் பொருட்களை எடை போட்டு முடித்த பின் தான் பில் போட முடியும். இதனால் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் போன்றவற்றைத் தடுக்கும் முயற்சியாக இது அமையும் என கூறப்படுகிறது.
ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை – எடப்பாடி பழனிசாமி:
தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன.
இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே துவரம் பருப்பு,…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 9, 2025
இதுவொரு பக்கம் இருக்க, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகளில் தற்போது கோதுமை விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்ற செய்திகள் வருகின்றன. இம்மாதத்திற்கு 8,072 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ‘ஸ்டாலின் மாடல்’ திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: “பல கோடி மக்களின் வாக்குறிமை கேள்விக்குறி” கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
நெல் கொள்முதல் முதல் கோதுமை விநியோகம் வரை, அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியிலும் ‘டோட்டல் ஃபெயில்யர்’ ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.