திமுகவின் ‘Patchwork’ – முதல்வரின் அறிவிப்பை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

AIADMK vs DMK : மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கூடுதலாக கோடைகால சிறப்பு நிதி என ரூ.5000 தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை திமுகவின் பேட்ச்வொர்க் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுகவின் Patchwork - முதல்வரின் அறிவிப்பை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின் - எடப்பாடி கே பழனிசாமி

Published: 

13 Feb 2026 15:42 PM

 IST

சென்னை, பிப்ரவரி 13 : மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக அதிகரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) வெளியிட்ட அறிவிப்பை திமுகவின் Patchwork என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர், 2026 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1.31 கோடி பெண்கள் இந்த திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் சேர்த்து கூடுதலாக 3000 ரூபாயும் கோடைகால சிறப்பு நிதியாக கூடுதலாக 2000 ரூபாயும் சேர்த்து ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்புக்கு பேட்ச்வொர்க் என விமர்சனம்

முதல்வரின் இந்த அறிவிப்பை திமுக கூட்டணிகள் வரவேற்பு அளித்து வரும் நிலையில், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், தோல்வி பயம் என்ன செய்ய வைக்கிறது பார்த்தீர்களா? ரூ.1000 வழங்குவதில் 28 மாதங்களாக காலம் தாழ்த்திய அரசு, இப்போது தேர்தல் நேரத்தில் கோடை சிறப்பு தொகையையும் சேர்த்து வழங்குகிறது. ஏன் கடந்த 2024, 2025 ஆண்டுகளில் கோடை வரவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : திறக்காத கூட்டணி கதவு.. செய்வதறியாது கையறு நிலையில் பன்னீர்செல்வம்.. எதிரே இருக்கும் ஒரே சான்ஸ்!

எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் பதிவு

 

மேலும் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிய அரசு தற்போது தேர்தல் நேரத்தில் பணம் வழங்கும் பேட்ச்வொர்க் நடவடிக்கையால் மக்களை ஏமாற்ற முடியாது. உங்கள் ஆட்சியில் இதுவரை வழங்கிய ரூ.34,000. ஆனால் ஒவ்வொரு குடும்பமும் இழந்தது ரூ.3,50,000. இது விடியா ஆட்சி என்பதை அதிமுக மக்கள் மத்தியில் எடுத்துரைத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :“என்னால் கிடைத்த ரூ.5000”.. சந்தோஷமா வாங்கிக்கோங்க.. விஜய் பரபர அறிவிப்பு!!

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நான் அளித்த ரூ.2000 வழங்கும் வாக்குறுதியை பார்த்து பயந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் 1 கோடி பெண்களுக்கு தகுதி இல்லை என நிராகரித்துள்ளீர்கள். 3 மாதங்களில் மக்கள் ஆதரவுடன் உருவாகும் அதிமுக அரசில் குத்து விளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்
‘கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு ரூ.2.52 கோடி அபராதம்.. செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை.. உயர்நீதிமன்றம்
சத்தமில்லாமல் இந்திய - அமெரிக்க வரத்தக ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்த அமெரிக்கா
மலையாள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ‘ரோஸ்லின்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..