Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எம்எல்ஏவாகும் எண்ணத்தில் வரவேண்டாம் – கட்சியினரிடம் கமல்ஹாசன் பேச்சு

Kamal Haasan : வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்.எல்.ஏ ஆகும் எண்ணத்தில் யாரும் கட்சியில் சேர வேண்டாம் என்றார். அவர் பேசியது குறித்து பார்க்கலாம்.

எம்எல்ஏவாகும் எண்ணத்தில் வரவேண்டாம் – கட்சியினரிடம் கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Sep 2025 16:51 PM IST

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 18, 2025 அன்று தொடங்கி 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 20, 2025 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  நெல்லை மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan) சந்தித்து பேசினார். இதில் பூத் கமிட்டி உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றதாக  கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் சாதி தான் என்னுடைய எதிரி, என்றும் எங்கிருந்தாலும் வாழ்க, ஆனால் சாதியுடன் வாழ வேண்டாம் என அறிவுறுத்தினார். அவர் பேசியது தொடர்பாக விவரமாக பார்க்கலாம்.

‘எம்எல்ஏவாகும் எண்ணத்தில் யாரும் வர வேண்டாம்’

நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், என்னுடைய முதல் அரசியல் எதிரி சாதி தான். நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க, ஆனால் சாதியுடன் வாழ வேண்டாம் சிறு வயதில் அதிகம் சாமி கும்பிட்டு இருக்கிறேன். அதற்காக நான் யாரையும் அவமதிக்கவில்லை. கோயிலாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் எங்கு உண்டியல் வைத்தாலும் அது பிரச்னை தான் என்றார். மேலும் என்னுடன் கட்சி தொடங்கும்போது வந்தவர்கள், பங்களாவுடன் வந்தவர்கள், அதே பங்களாவுடன் போகலாம். எம்எல்ஏ ஆகிவிடுவோம் என்ற எண்ணத்தில் யாரும் இங்கு வரவேண்டாம் என்றும் அவர் பேசினார்.

இதையும் படிக்க : ‘2026ல் இரண்டு பேருக்கு மட்டும் தான் போட்டி… பூச்சாண்டி வேலையை விட்டு…’ – நாகையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

கட்சி நிர்வாகிகளை சந்தித்த கமல்ஹாசன்

இதையும் படிக்க : பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர், மக்கள் நீதி மய்யம் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும் என்று தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். ஏன் செயல்படக்கூடாது? நான் ஆசைப்படக்கூடாதா என கேள்வி எழுப்பியிருந்தார். உங்கள் குழந்தை 100 வருஷம் வாழ வேண்டும் என நீங்கள் ஆசைப்பட மாட்டீர்களா? அதே ஆசை தான் எனக்கும். அதை கொண்டு செல்பவர்களுடைய பொறுப்பு என நியாபகப்படுத்தினேன். எனக்கு 70வது வயதாகி விட்டது. 100 வயது வாழ வேண்டும் என்றால் யார் வேலை செய்ய வேண்டும். அதைத் தான் என் கட்சியினரிடம் நியாபகப்படுத்தினேன் என்று தெரிவித்தார்.