அதிமுகவுக்கு ஆதரவளிக்க திமுக எங்களிடம் கேட்கவில்லை – எம்.ஏ.பேபி விளக்கம்

அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க திமுக எங்களிடம் கேட்கவில்லை என சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் எம்ஏ பேபி விளக்கமளித்துள்ளார்.  மேலும், ஆனால், அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை.  அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளார்கள். அதனால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த சிக்கலுமில்லை என்றார்.

அதிமுகவுக்கு ஆதரவளிக்க திமுக எங்களிடம் கேட்கவில்லை - எம்.ஏ.பேபி விளக்கம்

விஜய் - எம்ஏ பேபி

Updated On: 

09 May 2026 16:19 PM

 IST

அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க திமுக எங்களிடம் கேட்கவில்லை என சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் எம்ஏ பேபி விளக்கமளித்துள்ளார்.  தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளில் வென்றுள்ள தவெக ஆட்சியமைப்பதை சுற்றிய அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்ஏ பேபி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ஜனநாயக நடைமுறையை பின்பற்றவில்லை என்றார்.

திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியா?

மேலும் பேசிய அவர்,  அதிமுக மற்றும் திமுக இணைந்து ஆட்சி அமைப்பதாக வந்த தகவல் வதந்தி. ஆனால், அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை.  அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளார்கள். அதனால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த சிக்கலுமில்லை. திமுகவுடனான எங்கள் கூட்டணி சுமூகமாக தொடர்கிறது என்றார்.

இதையும் படிக்க : திருமாவளவன் ஏன் தயங்குகிறார்? திமுக முட்டுக்கட்டை போடுகிறது – தமிழிசை பரபரப்பு கருத்து

எம்ஏ பேபி விளக்கம்

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தற்போதைய ஆட்சியை நிராகரித்துள்ளனர். அதே நேரத்தில் பாரம்பரிய எதிர்க்கட்சிக்கும் முழு ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் புதிய கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளனர். அந்த அடிப்படையில், அதிக இடங்கள் பெற்ற கட்சியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்பது ஜனநாயக நடைமுறை என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஒரு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை லோக் பவனில் சோதிக்க முடியாது. அது சட்டமன்றத்தில் தான் நிரூபிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். மேலும், விஜய் எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பார் என்பது ஆளுநரின் வேலை அல்ல. முதலில் மிகப்பெரிய கட்சியை அழைத்து ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி..

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தவெகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து தனது கட்சியின் முடிவை திருமாவளவன் தெரிவிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி