AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குளு குளு சென்னை.. காலை முதல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பதிவாகி வரும் சூழலில், வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுகிறது. வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குளு குளு சென்னை.. காலை முதல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 May 2026 14:56 PM IST

சென்னை, மே 9, 2026: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வந்த சூழலில், கடந்த சில நாட்களாக நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரிக்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், தலைநகரான சென்னையிலும் காலை முதலே நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக புரசைவாக்கம், தேனாம்பேட்டை, ஆலந்தூர், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரத்தில் கனமழை பெய்து வந்த நிலையில், பிற்பகல் முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் உஷ்ணம் தணிந்து, பூமி குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் மழை:

இந்த மழை வரக்கூடிய நாட்களிலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரக்கூடிய நாட்களில் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதால் மழை தொடர்ச்சியாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

அந்த வகையில், இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மே 12 மற்றும் 13ஆம் தேதிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மே 14ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறையும் வெப்பநிலை:

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பதிவாகி வரும் சூழலில், வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுகிறது. வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us