தீபாவளி ஸ்பெஷல்! சென்னை டூ மதுரை… முன்பதிவில்லாத 4 ரயில்கள் அறிவிப்பு – எப்போ தெரியுமா?
Diwali Special Train : தீபாவளிக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில், சென்னையில் பணியாற்றும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அவர்களுக்கு ஏதுவாக மதுரை மார்க்கமாக செல்லும் 4 ஸ்பெஷல் ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி (Diwali) பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு இன்னும் சில நாட்களை உள்ளன. மக்கள் தற்போது தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவது என கடைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலையோர வியாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்யாதவர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரை மார்க்கமாக முன்பதிவு இல்லாத 4 சிறப்பு ரயில்களை (Special Train) தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
முன்பதிவில்லாத 4 சிறப்பு ரயில்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து மதுரை இடையே முன்பதிவில்லாத மெமு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் இந்த வாயப்பை பயன்படுத்திக்கொள்லலாம். மதுரை மட்டுமல்லாமல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, காரைக்குடி என சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு செல்பவர்களும் இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிக்க : தீபாவளி டிமாண்ட் – கட்டணத்தை அதிரடியாக குறைத்த ஆம்னி பேருந்துகள் – எவ்வளவு தெரியுமா?
- அதன் படி அக்டோபர் 17, 2025 இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில இருந்து புறப்படும் ரயில் பண்ருட்டி, மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக அக்டோபர் 18, 2025 காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும்.
- அக்டோபர் 18, 2025 அன்று மதியம் சரியாக 12 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக இரவு 7:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
- அக்டோபர் 18, 2025 அன்று இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் பண்ருட்டி, மயிலாடுதுறை, திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி வழியாக அக்டோபர் 19, 2025 அன்று காலை சரியாக 11.30 மணிக்கு மதுரை வந்தடையும்.
- அதே போல அக்டோபர் 21, 2025 இரவு 8.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், வழியாக மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதையும் படிக்க : Omni Bus: ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!
இந்த ரயிலை மதுரை மக்கள் மட்டுமல்லாமல் மதுரையை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். தீபாவளிக்கு கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு இந்த ரயில் சேவை பெரும் உதவியாக இருக்கும். தனியார் பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் குறைவான கட்டணத்தில் எளிய மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக தென்னக ரயில்வே இந்த 4 ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.