சென்னையில் டெங்கு பரவல் அதிகரிப்பு: மாணவர்கள் அதிகம் பாதிப்பு, மாநகராட்சி நடவடிக்கை

Chennai Dengue Spread: சென்னையில் மழையால் டெங்கு பரவல் அதிகரித்து, மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூர், அடையாறு பகுதிகளில் அதிக டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகிறது. பல்வேறு பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படும் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

சென்னையில் டெங்கு பரவல் அதிகரிப்பு: மாணவர்கள் அதிகம் பாதிப்பு, மாநகராட்சி நடவடிக்கை

டெங்கு

Published: 

22 Jul 2025 10:46 AM

சென்னை ஜூலை 22: சென்னையில் (Chennai Rain) மழையால் சாலைகளிலும் பள்ளங்களிலும் நீர் தேங்கி டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. சோழிங்கநல்லூர், அடையாறு (Sholinganallur, Adyar) பகுதிகளில் 170 பேருக்கு மேல் டெங்கு பாதிப்பு (Dengue outbreak) ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி (Chennai Corporation)  3,200 பேரை வீடு வீடாகக் கொசு ஒழிப்பு பணிக்கு நியமித்துள்ளது.2025 ஜூன் மாதம் வரை 23 டன் டயர் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படும் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

இடைவிடாமல் பெய்து வரும் மழை

சென்னை நகரில் கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால், சாலையோரங்களில் மற்றும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் விளைவாக, டெங்கு பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் அதிக அளவில் பெருகி வருவதால், பெரும்பாலான பகுதிகளில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகிறது. சோழிங்கநல்லூர் மற்றும் அடையாறு மண்டலங்கள் ஆகியவை கொசு உற்பத்தி மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Also Read: தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

குறிப்பாக, இந்த மண்டலங்களில் 170க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பான்மையானோர் பள்ளி செல்லும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய்த்தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சியின் நகா்நலப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததாவது, டெங்கு ஒழிப்புப் பணிக்காக வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் வகையில் 3,200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொசு முட்டைகளை கண்டறிந்து அழிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மாணவர்கள் அதிகம் பாதிப்பு, மாநகராட்சி நடவடிக்கை

மேலும், கடந்த 2025 ஜூன் மாதம் வரையில், வீடுகளில் மற்றும் பொது இடங்களில் தேங்கியிருந்த 23 டன் வாகன டயர்களை உட்பட தேவையற்ற கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், நகரத்தின் பல பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.