லாரி வடிவில் வந்த எமன்.. மகளை பறிகொடுத்து நடுரோட்டில் கதறிய தந்தை.. குமரியில் மனதை ரணமாக்கும் சம்பவம்!

Kanyakumari Crime: கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மீது கனிம வளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரர் கண் முன்னே அவரது மகள் பரிதாபமாக துடிக்க துடிக்க உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி வடிவில் வந்த எமன்.. மகளை பறிகொடுத்து நடுரோட்டில் கதறிய தந்தை.. குமரியில் மனதை ரணமாக்கும் சம்பவம்!

கோப்புப்படம்

Updated On: 

10 Apr 2026 13:07 PM

 IST

கன்னியாகுமரி மாவட்டம், களியல் சிற்றாறு கரை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். ராணுவ வீரர். இவர், நேற்று இரவு தனது மகள் ஹாட்லின் அபினாவுடன் தனது இரு சக்கர வாகனத்தில் தக்கலை வழியாக சென்று கொண்டிருந்தார். தக்கலை காவல் நிலையம் வழியாக அவர்களது பைக் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக பின்னால் கனிம வளங்கள் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக கிறிஸ்துராஜ் பைக் மீது பலமாக மோதியது. இந்த கொடூரமான விபத்தில் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மகள் ஹாட்லின் மீது லாரியின் டயர் ஏறி இறங்கியது. இதில், ஹாட்லின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், தந்தை கிறிஸ்துராஜ் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க உயிர் இழந்தார். உடனே, அந்த பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய கிறிஸ்துராஜாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணுவ வீரர்

பலத்த காயமடைந்த கிறிஸ்துராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் உயிரிழந்த ஹாட்லின் அபினா சடலம் உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, கிறிஸ்துராஜ் குடும்பத்தினர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், லாரி ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்திலேயே அதிகம்.. 73 வேட்பாளர்கள் களம் காணும் “ஹாட்” தொகுதி எது தெரியுமா?

கனரக லாரியை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்

முன்னதாக இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்து அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இந்த பகுதிகளில் உள்ள கனிம வளங்களை சட்டத்துக்கு புறம்பாக கடத்திச் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தந்தை கண் முன்னே பிரிந்த மகள் உயிர்

இதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். காவல் நிலையத்தின் எதிரே நிகழ்ந்த விபத்தில் ராணுவ வீரரின் கண் முன்னே அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி.. “சிங்கிள் டிஜிட்” மோதல்… எத்தனை பேர் தெரியுமா!

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?