Cyclone Montha: முழுவதுமாக கரையை கடந்தது மோந்தா புயல்!!
Cyclone montha landfall: கடந்த 2 நாட்களாக ஆந்திர, வடகடலோர பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த மோந்தா புயல் கரையை கடந்தது. தீவிர புயலாகக் கரையைக் கடந்தா மோன்தா, புயலாக வலுவிலந்தது. தொடர்ந்து, இன்று முற்பகலில் இது மேலும் வலுவிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 29: வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் (Cyclone Montha) தீவிர புயலாக உருமாறி ஆந்திர மாநிலம் மச்சிலிபட்டணம் மற்றும் காலிங்கப்பட்டணம் இடையே நள்ளிரவில் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த சமயம் ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மின் கம்பங்கள் சாய்ந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. புயல் கரையை கடந்த சமயத்தில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அங்கு மீட்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், அங்கு கிட்டதட்ட 15 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.




தமிழகத்தில் பாதிப்பு இல்லை:
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து, 2 நாட்ளாக வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த இந்த புயலானது நேற்று நள்ளிரவில் ஆந்திரா கடலோர பகுதியான மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தமிழகத்தின் வடமாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்து. எனினும், புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் எதிர்பார்த்த அளவு தமிழ்நாட்டில் பெரியளவில் தாக்கம் எதுவும் இல்லை என்றே கூறலாம். அதேசமயம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
ஆந்திராவில் கடும் பாதிப்பு:
மோன்தா புயலின் தாக்கத்தால், ஆந்திராவின் மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 17 கடலோர மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகனழை பெய்தது. இதனால், சுமார் 38,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகின, அதோடு, 1.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான தாவிர பயிர்கள் நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் கரையை கடந்த சமயம் அங்கு 110 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன், அதிகனமழை பெய்துள்ளது. இதனால், பல பகுதிகளில் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதோடு, விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 32 விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. கடந்த 2 நாட்களில் மட்டும் விஜயவாடா மார்க்கத்தில் 150க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிக்கப்பட்டன. அதோடு, 116 ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
ALSO READ: நெல்மணிகள் வீணாகி முளைத்தது போல… திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய் வெளியிட்ட அறிக்கை
2 பெண்கள் பலி, பலர் காயம்:
புயல் முழுமையாக கரையை கடந்தபோதும், வட ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் கனமழை இன்னும் கூடுதலாக பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அங்கு மீட்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ள போதிலும் கனமழை தொடர்வதால் அதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள மகானகுடேம் கிராமத்தில் சூறாவளி காற்று வீசியதன் காரணமாக பனை மரம் முறிந்து வீட்டின் மேல் விழுந்ததில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு, 50-க்கும் மேற்பபட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதேபோல், மரம் விழுந்து பல்வேறு இடங்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.