விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைமை வெளியிட்ட ஏஐ வீடியோ.. இணையத்தில் பேசுபொருள்!

Rahul Gandhi and Vijay AI Video | தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ், திமுகம் உடன் களம் கண்ட நிலையில், தேர்தலுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துள்ளது. இதுதவிர விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் இன்று புதிய அரசு பதவி ஏற்கிறது.

விஜய் - ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைமை வெளியிட்ட ஏஐ வீடியோ.. இணையத்தில் பேசுபொருள்!

காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

Updated On: 

10 May 2026 06:55 AM

 IST

சென்னை, மே 10 : தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) மாபெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. குறிப்பாக தொங்கு சட்டசபை ஏற்பட்டதன் காரணமாக கட்சிகளின் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி மற்றும் ஆதரவு என இன்று (மே 10, 2026) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணிக்கு மாறிய காங்கிரஸ், ராகுல் காந்தி மற்றும் விஜய் இருப்பதை போல ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி – விஜய் – காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ

தமிழகத்தில் உள்ள மொத்த 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெறும். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் மாபெரும் திருப்புமுனையாக மாறியது. காரணம் 2026 சட்டமன்ற தேர்தலை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியுடன் களம் கண்ட நிலையில், தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தணித்து களம் கண்டது.

இதையும் படிங்க : கிடைத்தது முழு பெரும்பான்மை – ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரிய விஜய்

இதன் காரணமாக தேர்தலுக்கு பின்னால் கூட்டணி சேறும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் திமுக உடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெகவுக்கு மாறியது. இதன் மூலம் தவெகவுக்கு 5 தொகுதிகள் அதிகமாக கிடைத்தன. இருப்பினும் 6 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.

காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

தற்போது காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் தான், ரஜினி மற்றும் கமல் என இரு துருவங்களை வைத்து நெல்சன் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ஒரு வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், அதேபோல ராகுல் காந்தி மற்றும் விஜய் இருக்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் மாநில தலைவர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு – திருமாவளவன் பகிர்ந்த தகவல்

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி