IPL 2026: லக்னோவுக்கு எதிரான போட்டி.. சொந்த ஸ்டேடியத்தில் சென்னை வெற்றி பெறுமா? ஹெட் டூ ஹெட் விவரம்!
CSK vs GT: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டிகளிலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.
ஐபிஎல் 2026-ன் (IPL 2026) 53-வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை இன்று அதாவது 2026 மே 10ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு எதிர்கொள்கிறது. ஐபிஎல் 2026 சீசனின் தொடக்கத்தில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி தங்களின் அடுத்த 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று, தற்போது 10 புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் 6வது இடத்தில் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் 156 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகத் துரத்தி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இதுவரை வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளி அட்டவணையின் கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், லக்னோ அணி தங்களது முந்தைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 210 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகப் பாதுகாத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
ALSO READ: ஜார்க்கண்ட்-பீகாரில் அதிக வரி செலுத்திய நபர்.. முதலிடத்தில் தோனி!




இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டிகளிலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.
சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 26, 2026 அன்று நடந்த முந்தைய போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 158/7 ரன்கள் எடுத்தது, இதை குஜராத் அணி 16.4 ஓவர்களில் வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது (162/2). இது, இந்தப் போட்டி குறைந்த ரன்கள் எடுக்கப்படும் ஒன்றாக இருக்கலாம் என்பதையும், பிட்ச் சேப்பாக்கத்தின் வழக்கமான மெதுவான, வறண்ட, சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான மற்றும் குறைந்த பவுன்ஸ் கொண்ட ஆடுகளமாக இருக்கும் என்பதையும் உணர்த்துகிறது.
ALSO READ: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துகொண்ட KKR.. புள்ளிப் பட்டியலில் முதலிடம் யார்?
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் படேல், கார்த்திக் ஷர்மா, டெவால்ட் ப்ரூவிஸ், ஜேமி ஓவர்டன், அகேல் ஹொசைன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, குர்ஜபனீத் சிங்
இம்பாக்ட் வீரர்: பிரசாந்த் வீர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
மிட்செல் மார்ஷ், அர்ஷின் குல்கர்னி, நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், ரிஷப் பந்த் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), அக்ஷத் ரகுவன்ஷி, ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, திக்வேஷ் சிங் ரதி, முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ்
இம்பாக்ட் வீரர்: மயங்க் யாதவ்