AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பண மழையில் நனையவிருக்கும் தமிழக மக்கள்… மாதம் ரூ.2000… காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

Congress Election Manifesto : தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ரூ.2000, விவசாயிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது .

பண மழையில் நனையவிருக்கும் தமிழக மக்கள்… மாதம் ரூ.2000… காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 09 Apr 2026 17:00 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரம் தலைமையிலான குழு தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்தது. இந்த நிலையில், சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 9) நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, கர்நாடக மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, “தமிழகத்தை முன்னேற்றுவோம்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட 36 பக்கங்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் வெளியிட்டார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு:-

மேலும் படிக்க: தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி?.. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?..

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்…

  • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை.
  • தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை.
  • காவல்துறையில் 40 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பி. எம். கிஷான் நிதி உதவி திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000 ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசு பள்ளி மாணவர்களுக்காக டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தமிழகம் ஆன்மீக சுற்றுலா நகரமாக மாற்றப்படும்.
  • தெரு நாய்களுக்கு 100 சதவீதம் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி வீடியோ

28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ளனர். கூட்டணிக்குள் ஆட்சி அதிகாரம் மற்றும் கூடுதல் தொகுதி பங்கீடு ஆகியவற்றை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தல் உடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 3 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நாளை காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்.. ரோடு ஷோக்கு அனுமதி கிடைக்குமா?

Follow Us