கடலோர தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
Moderate Rain In Costal Tamil Nadu | தமிழகத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 06, 2026) தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஜனவரி 06 : தமிழகத்தில் இன்று (ஜனவரி 06, 2025) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதனாம மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை நேரத்தில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்
தமிழகத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தெற்கு கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதையும் படிங்க : நீலகிரியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி மரணம் – வனத்துறை அறிவிப்பு – காரணம் என்ன?




தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழக கடலோர பகுதிகள் மற்றும் உள்தமிழக பகுதிகளில் ஒரு சில் இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.