திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க பிரத்யேக செயலி.. இன்று அறிமுகம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்..
dmk manifesto app: கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஜனவரி 9ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகளை கேட்ட பின்னர், இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கையை தயாரித்து வழங்க உள்ளது.
சென்னை, டிசம்பர் 31: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்து கேட்க பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அதேசமயம், அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கியுள்ளன. தொடர்ந்து, கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு என அடுத்தடுத்தப் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்மூரமாக இயங்கி வருகிறன்றன. இந்த தேர்தலில் புதிதாக விஜய்யின் தவெக கட்சியும் போட்டியிடுகிறது. இதனால், தேர்தல் மீதான எதிர்பார்ப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க : ஆங்கில புத்தாண்டுக்கு பொதுமக்கள் ஈஸியா ஊருக்கு செல்லலாம்…TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தேர்தலில் கடும் போட்டி:
ஏனெனில், வழக்கமாக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்ற அளவிலேயே தமிழகத்தில் போட்டி இருக்கும். தற்போது மூன்றாவதாக ஒரு பெரும் கட்சி உருவாகி நேரடியாக தேர்தலை சந்திப்பதையே நோக்கமாக வைத்து போட்டியிட்டு வருகிறது. இதனால், மக்களின் வாக்குகள் பிரியுமா, எந்த கட்சி பின்னடைவை சந்திக்கும் என்பது போன்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. அதேசமயம், இந்த கடும் போட்டியை சமாளிக்க தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கைக்கு முக்கிய பங்கு இருக்கும். வெற்றிபெற்றால், என்னென்ன செய்வோம் என்பது குறித்து அறிக்கையே இந்த தேர்தல் அறிக்கை ஆகும்.
மக்களிடம் கருத்து கேட்க திமுக திட்டம்:
முன்னதாக விஜய் பேசியபோது, வீட்டிற்கு ஒரு இரு சக்கர வாகனம் கட்டாயம் எனக் கூறியிருந்தார். அதோடு, தான் இலசங்களுக்கு எதிரி இல்லை என்றும் கூறியிருந்தார். அப்படியிருக்க, அவரும் பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கடும் போட்டிகளை சமாளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும். இதனால், மக்களிடமே கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையை உருவாக்க திமுக திட்டமிட்டுள்ளது.
மக்கள் கருத்து தெரிவிக்க பிரத்யேக செயலி:
இதையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைமை அமைத்தது. அந்த குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக சமீபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியது. இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிப்பதற்காக பிரத்யேக செயலியை திமுக தலைமை உருவாக்கி உள்ளது.
இதையும் படிக்க : பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!
தேர்தல் அறிக்கை செயலி இன்று அறிமுகம்:
இந்த செயலியை திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்கிறார். மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை, கருத்துகளை இதன் மூலமாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஜனவரி 9ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகளை கேட்ட பின்னர், இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கையை தயாரித்து வழங்க உள்ளது.