இயல்பை விட அதிகமாக பதிவான வடகிழக்கு பருவமழை – பிரதீப் ஜான்..
North East Monsoon Tamil Nadu: டிசம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து வட கிழக்கு பருவ மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருந்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரம், டிசம்பர் 31, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அளவு இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் வங்கக்கடலில் மோன்தா புயல் உருவானது. இதன் காரணமாக வடகடலோர தமிழக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன முதல் மிக கனமழை பதிவானது.
இதனால் அக்டோபர் மாதத்தில் கிடைக்க வேண்டிய நீர்தேவை பெருமளவில் பூர்த்தி அடைந்தது. ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறண்ட வானிலை நிலவி வந்தது. குறிப்பாக தென் தமிழகத்தில் மட்டும் நல்ல மழை பதிவாகிய நிலையில், ஏனைய பகுதிகளில் அவ்வப்போது லேசான மற்றும் மிதமான மழை மட்டுமே பெய்து வந்தது.
வங்கக்கடலில் உருவான புயல்கள்:
இந்த சூழலில், நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் உருவானது. இந்த டிட்வா புயல் ஆரம்பத்தில் இலங்கை கடற்பகுதியில் நிலைகொண்டிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, டெல்டா மாவட்டங்களை நோக்கி நகரத் தொடங்கியது. அதன்பின் வடகடலோர தமிழக மாவட்டங்களான நாகப்பட்டினம், கடலூர் பகுதிகளை நோக்கி நகர்ந்தது.
மேலும் படிக்க: புத்தாண்டு முதல் இந்த 22 ரயில்களின் வேகம் அதிகரிப்பு…. தெற்குவே ரயில்வே அறிவிப்பு
இந்த டிட்வா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பதிவானது. குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 25 முதல் 30 சென்டிமீட்டர் அளவு மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அங்கு பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த புயலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புயல் மெல்ல மெல்ல வடகடலோர தமிழகத்தை நோக்கி நகரும் போது வலுவிழந்தாலும், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, கிட்டத்தட்ட 48 மணி நேரம் சென்னை அருகே நிலைகொண்டிருந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வடகடலோர தமிழக மாவட்டங்களில் 2 முதல் 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது.
மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம் – பட்டாசுகள் வெடிக்க தடை… என்னென்ன கட்டுப்பாடுகள்?
இயல்பை விட அதிகமாக பதிவான வடகிழக்கு பருவமழை:
6 year above normal NEM streak for Tamil Nadu and 5 year above normal NEM streak for Chennai comes to an end. Very strong negative IOD and Absence of MJO are the major reasons.
Till end MJO did not come into our seas after October. Both November and December flopped. https://t.co/dEgecXTOIn
— Tamil Nadu Weatherman (@praddy06) December 30, 2025
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருந்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகி வருகிறது என்றும், குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னையில் இயல்பை விட அதிகமான மழை தொடர்ந்து பதிவாகி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.